மார்கெட் காலி.. ரூ.8999 போதும்.. SONY கேமரா.. 1TB மெமரி.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்தியாவில் பட்ஜெட் போன்களில் பக்கா பீச்சர்களை கொடுத்து தனியிடம் பிடித்துள்ள இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) போனுக்கு பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 48 எம்பி கேமரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, டைமன்சிட்டி 6300 சிப்செட், 1 டிபி மெமரி போன்ற பீச்சர்களை கொண்ட இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரூ.10000 பட்ஜெட்டில் டிரிபிள் ரியர் கேமரா கிடைப்பதே குதிரை கொம்பாகும். ஆனால், இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனில் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், சோனி ஐஎம்எக்ஸ்582 (Sony IMX582) சென்சாரும் கிடைக்கிறது. ஏஐ கேம் (AI Cam) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடைப்பதால், லேட்டஸ்ட் பீச்சர்களை எதிர்பார்க்கலாம்.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்இடி (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டியுடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் பேக் செய்துள்ளது. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் எக்ஸ்ஓஎஸ் 14.5 (XOS 14.5) வருவதால், டைனாமிக் போர்ட் (Dynamic Port) பீச்சர் எதிர்பார்க்கலாம்.
எல்சிடி (LCD) பேனலுடன் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.7 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. பஞ்ச்-ஹோல் டிசைனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. 48 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கிடைக்கிறது. ஏஐ லென்ஸ் மற்றும் பிளாஷ் கிடைக்கிறது.
டியுவி எஸ்யுடி கிரேடு ஏ (TUV SUD Grade A) சர்டிபிகேஷன் கொண்ட 7.82 மிமீ ஸ்லிம் பாடி மற்றும் 188 கிராம் எடை வருகிறது. இந்த சர்டிபிகேஷன் போக IP54 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி சிலாட் (microSD Slot) கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது.
இந்த 4 ஜிபிக்கு அடுத்த 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் + 8 ஜிபி ரேம் கொண்ட மற்றொரு வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ரேம் மாடலுக்கும் 128 ஜிபி மெமரி மற்றும் 1 டிபி எஸ்டி சிலாட் கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட்டுடன் 5000mAh பேட்டரி சிஸ்டம் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனில் வருகிறது.
ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், ஏஐ கேமரா (AI Camera), ஏஐ வால்பேப்பர் (AI Wallpaper), ஏஐ சார்ஜ் புரொடெக்சன் (AI Charge Protection) கிடைக்கிறது. மேலும், ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) இருக்கிறது. சேஜ் கிரீன் (Sage Green), ஸ்லீக் பிளாக் (Sleek Black) மற்றும் வைபரென்ட் ப்ளூ (Vibrant Blue) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வந்தபோது 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999 ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. ஆகவே, ரூ.8,999 விலைக்கு வாங்கலாம். ரூ.9,600 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1000 டிஸ்கவுண்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications








