Home
Mobile

யாருமே எதிர்பார்க்கல.. தர லோக்கலுக்கு இறங்கிய Infinix 5ஜி போன்.. சோனி கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, IP54 ரேட்டிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் மலிவு விலையில் வெளிவந்துள்ளது. இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனின் அம்சங்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி அம்சங்கள் (Infinix Hot 50 5G Specifications): தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் XOS 14.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

யாருமே எதிர்பார்க்கல..  தர லோக்கலுக்கு இறங்கிய Infinix 5ஜி போன்..

இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே உடன் இந்த வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன. அதேபோல் பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 சென்சார் (Sony IMX582 sensor) + டெப்த் சென்சார் + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor)உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது புது இன்பினிக்ஸ் போன்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000mAh பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ ((5G SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C), புளூடூத் 5.3 (Bluetooth 5.3) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. மேலும் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி போனின் எடை 188 கிராம் ஆகும்.

யாருமே எதிர்பார்க்கல..  தர லோக்கலுக்கு இறங்கிய Infinix 5ஜி போன்..

ஸ்லீக் பிளாக் (Sleek Black), ட்ரீமி பர்ப்பிள் (Dreamy Purple),சேஜ் கிரீன் (Sage Green), Vibrant Blue ஆகிய நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி
வேரியண்ட் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

செப்டம்பர் 9 ஆம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை வெறும் ரூ.8,999-விலையில் வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Infinix Hot 50 5G launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X