Home
Mobile

ஆர்டர் போட்ருங்க.. 48எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி (Infinix Hot 50 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48எம்பி கேமரா, ஐபி54 ரேட்டிங், 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ஸ்மார்ட்போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் போட்ருங்க.. ஆஃபரில் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி அம்சங்கள் (Infinix Hot 50 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் XOS 14.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

6.7-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே உடன் இந்த வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி. மேலும் 1600 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே. குறிப்பாக பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி சோனி ஐஎம்எக்ஸ்582 சென்சார் (Sony IMX582 sensor) + டெப்த் சென்சார் + AI லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor)உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதேபோல் IP54 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது புது இன்பினிக்ஸ் போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

அதேபோல் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன். அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ ((5G SA / NSA), டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C), புளூடூத் 5.3 (Bluetooth 5.3) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த போன். ஸ்லீக் பிளாக் (Sleek Black), ட்ரீமி பர்ப்பிள் (Dreamy Purple),சேஜ் கிரீன் (Sage Green), Vibrant Blue ஆகிய நிறங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

5000mAh பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 50 5G is available at 36 percent discount in Flipkart sale: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X