Home
Mobile

ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.11,293 போதும்.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த போன்?

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 சீரிஸ் போன்கள் வரும் டிசம்பர் 8ஆம் தேதி இந்தியாவில் வெளியாக இருக்கும் வேளையில், அந்த நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ (Infinix Hot 40i) போனின் குளோபல் வேரியண்ட் பட்ஜெட்டில் வெளியாகி மூக்கில் விரல் வைக்க செய்துள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ அம்சங்கள் (Infinix Hot 40i Specifications): இந்த போனில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.58 இன்ச் (720 × 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட், 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டிசிஐ-பி3 கலர் காமட் வருகிறது.

ரூ.11,293 போதும்.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த போன்?

இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மேஜிக் ரிங் நோட்டிபிகேஷன் சப்போர்ட் கொண்ட எக்ஸ்ஓஎஸ் 13.0 (XOS 13.0) வருகிறது. அதோடு ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி 1 (Mali-G57 MC1) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் 4ஜிபி ரேம் + 4 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த போனில் டூயல் ரியர் கேமரா வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவில் ஷார்ட் வீடியோ, ஏஐ கேம் (CAM), பியூட்டி, சூப்பர் நைட், ஸ்லோவ் மோஷன், பனோரமா, ப்ரோ மற்றும் அல்ட்ரா எச்டி போன்ற மோட்கள் வருகின்றன. அதேபோல 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 1080P தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் இடம் பெற்றுள்ளது.

அதேபோல கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், ஜிபிஎஸ் (GPS), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.1 (BLUETOOTH 5.1), ஓடிஜி (OTG), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் என்எப்சி (NFC) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போன் 190 கிராம் எடை கொண்டிருக்கிறது. 8.30 மிமீ தடிமன் மட்டுமே கொண்டு ஸ்லிம் டிசைன் கொண்டுள்ளது.

ரூ.11,293 போதும்.. 16GB ரேம்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. எந்த போன்?

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போனில் ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black), பால்ம் ப்ளூ (Palm Blue), ஹரிசோன் கோல்டு (Horizon Gold) மற்றும் ஸ்டார்ஃபால் கிரீன் (Starfall Green) ஆகிய நான்கு கலர்கள் விற்பனை வருகின்றன. இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.8,102 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,293 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஏற்கனவே சவுதி அரேபியா மற்றும் ஆப்பிரிக்காவின் கானா ஆகிய நாடுகளில் வெளியாகியிருந்த நிலையில், இப்போது இதன் குளோபல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்தியா உள்பட மற்ற நாடுகளில் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 40i With 50MP Camera, 8GB RAM Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X