ஆளுக்கொரு ஆர்டர்.. ரூ.11000 பட்ஜெட்ல 32MP செல்பீ.. 16GB ரேம்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
இந்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 50எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ (Infinix Hot 40i) போன் மிரளவிடும் விலைக்கு வெளியாக இருக்கிறது.
இன்பினிக்ஸ் நிறுவனம், அதனுடைய இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போனை, இந்த மாதத்தில் வெளியிட இருப்பதாக இந்திய மார்கெட் வட்டாரங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு, அந்த போனின் கேமரா, டிஸ்பிளே மற்றும் பாஸ்ட் சார்ஜிங் போன்ற முக்கியமான அம்சங்களும் வெளியாகி பட்ஜெட் பிரியர்களை அதிர வைத்துள்ளது.
இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மேஜிக் ரிங் பீச்சர் இடம் பெற்றுள்ளது. ஆக்டா-கோர் சிப்செட் வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்டிருக்கிறது. 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஃபுஎல்எச்டிபிளஸ் டிஸ்பிளே வருகிறது.
குவாட் எல்இடி ரிங் ஃபிளாஷ் வருகிறது. எக்ஸ்பூஸ்ட் கேமிங் என்ஜின் சப்போர்ட் உள்ளது. இந்த அம்சங்கள் மட்டுமே கசிந்துள்ளன. இருப்பினும், இந்த போனின் குளோபல் வேரியண்ட் கடந்த டிசம்பர் மாதமே வெளியாகிவிட்டது. அதோடு சில நாடுகளில் விற்பனைக்கும் வந்துவிட்டது. ஆகவே, அவற்றை இப்போது தெரிந்து கொள்வோம்.
இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ அம்சங்கள் (Infinix Hot 40i Specifications): இந்த போனில் 6.58 இன்ச் (720 × 1612 பிக்சல்கள்) புஎல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 180Hz டச் சாம்பிளிங் ரேட், 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டுள்ளது.

ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் வருகிறது. அதோடு கேமிங் பூஸ்ட் சப்போர்ட் கொண்ட மாலி ஜி57 எம்சி 1 (Mali G57 MC1) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. 50 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் கொண்டுள்ளது.
இந்த கேமராவில் 1080P தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. அதோடு 4 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black), பால்ம் ப்ளூ (Palm Blue), ஹரிசோன் கோல்டு (Horizon Gold) மற்றும் ஸ்டார்ஃபால் கிரீன் (Starfall Green) ஆகிய 4 கலர்கள் இருக்கின்றன.
சவுதி அரேபியாவில் விற்பனைக்கு வந்த இந்த போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.8,102 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,293ஆக இருக்கிறது. இதே விலையில், இந்தியாவில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








