ஆடிப்போன மார்கெட்.. ரூ.8,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 16GB ரேம்.. 2TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டே மிரளும்படி ரூ.8,999 பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 2டிபி மெமரி, 50எம்பி கேமரா, மேஜிங் ரிங் பீச்சர், 5000mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக்கில் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ (Infinix HOT 40i) போன் அறிமுகமாகியிருக்கிறது.
இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ விலை (Infinix HOT 40i Price): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, ரூ.8,999 பட்ஜெட்டில் இந்த போன் விற்பனைக்கு வர இருக்கிறது.

பிப்ரவரி 21ஆம் தேதி முதல் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black), பால்ம் ப்ளூ (Palm Blue), அரிசோன் கோல்டு (Horizon Gold) மற்றும் ஸ்டார்ஃபால் கிரீன் (Starfall Green) ஆகிய 4 கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.
இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ அம்சங்கள் (Infinix HOT 40i Specifications): இந்த போனில் 6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே மாடலாகும். அதோடு 180Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் மேஜிக் ரிங் (Magic Ring Notification) நோட்டிபிகேஷன் சப்போர்ட் உள்ளது. பேட்டரி, ஃபேஸ் அன்லாக், சார்ஜிங் நோட்டிபிகேஷன்களை இதில் தெரிந்து கொள்ளலாம். இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போனில் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட ஆக்டா கோர் யுனிசாக் டி606 12என்எம் (Octa Core Unisoc T606 12nm) சிப்செட் வருகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி ஜி57 எம்பி1 ஜிபியு (Mali G57 MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. அதோடு 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் உள்ளது.

ஆகவே, மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot), டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. டிடிஎஸ் (DTS) சப்போர்ட் கொண்ட பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) வருகிறது. பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் உள்ளது.
அதேபோல இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. குவாட் எல்இடி ரிங் ஃபிளாஷ் (Quad LED Ring Flash) வருகிறது. அதோடு 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது.
இந்த மெயின் கேமராவில், ப்ரோ கேமரா மோட் (Pro Camera Mode), சூப்பர் நைட் மோட் (Super Night Mode) மற்றும் ஷார்ட் வீடியோ மோட் (Short Video Mode) ஆகியவை வருகின்றன. டூயல் எல்இடி ஃபிளாஷ் (Dual LED Flash) கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 190 கிராம் எடை கொண்டுள்ளது.
அதேபோல 8.3 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. இந்த ன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதுவொரு 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்இடி (Dual 4G VoLTE) சப்போர்ட் கொண்டுள்ளது. வை-பை 802, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் சப்போர்ட் வருகிறது.


Click it and Unblock the Notifications