ஆளுக்கு 1 வாங்குவீங்க.. ரூ10,000 பட்ஜெட்ல 50MP கேமரா.. எல்சிடி டிஸ்பிளே.. 256GB மெமரி.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த போன் வரும் பிப்ரவரி 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் தான் விற்பனைக்கு வர இருக்கிறது.
டூயல் ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ அம்சங்கள்(Infinix Hot 40i Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD)டிஸ்பிளே வசதியுடன் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ வெளிவரும். பின்பு இதன் டிஸ்பிளேவில் 720 × 1612 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போன் அறிமுகமாகும். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மூலம் இந்த போன் இயங்கும்.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கேமிங் பூஸ்ட் சப்போர்ட் கொண்ட மாலி ஜி57 எம்சி 1 (Mali G57 MC1)கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ வெளிவரும். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
50 எம்பி மெயின் கேமரா + AI லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போன் வெளிவரும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black), பால்ம் ப்ளூ (Palm Blue), ஹரிசோன் கோல்டு (Horizon Gold) மற்றும் ஸ்டார்ஃபால் கிரீன் (Starfall Green) ஆகிய நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
அதேபோல் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ மாடல் ஆனது ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கம்மி விலையில் அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications