ரூ.8,300 போதும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. 5000mAh பேட்டரி.. அறிமுகமானது இன்பினிக்ஸ் போன்..
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 9-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனாலும் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன் சில நாடுகளில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ (Infinix Hot 40i) போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ அம்சங்கள் (Infinix Hot 40i Specifications)இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போன் 6.56 இன்ச்ஃ எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90 ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சக்திவாய்ந்த மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் (MediaTek Helio G88 chip) வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ மாடல்.
ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போன் பாம் ப்ளூ (Palm Blue), ஹொரைசன் கோல்ட் (Horizon Gold)மற்றும் ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black) நிறங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
குறிப்பாக இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இதில் உள்ளது.
இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன். சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) கொண்டு வெளிவந்துள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ மாடல். மேலும் குறைந்த எடை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (18W charging) வசதி இதில் உள்ளது.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போனின் விலை $100 (ரூ.8,300) ஆகும். பின்பு இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை $125 (ரூ.10,400) ஆகும். குறிப்பாக இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications