மார்க்கெட்டே மிரள போகுது.. வெறும் ரூ.10,000 போதும்.. 50MP கேமரா.. LCD டிஸ்பிளே.. 256GB மெமரி.. எந்த போன்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
அதாவது இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு, தரமான கேமரா மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40 போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ அம்சங்கள் (Infinix Hot 40i specifications): 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
அதேபோல் நோக்கியா போன்களில் அதிகம் இடம்பெறும் யுனிசாக் டி606 சிப்செட் (UNISOC T606 SoC)வசதியுடன் தான் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போனில் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

5000எம்ஏஎச் பேட்டரியைக் (5000mAh battery) கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (18W fast charging) வசதியும் இதில் உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன்.
டூயல் சிம் (dual SIM), யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் (3.5mm headphone jack) வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்தியாவில் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ ஆனது ரூ.10,000-க்கு கீழ் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








