Home
Mobile

தாராளபிரபு நீங்களா? ஒரு குடும்பத்துக்கு 3 போன் வாங்கலாம் போலயே.. விற்பனைக்கு ரெடியாகும் புது Mobile..

இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையை புரட்டிப்போட ஒரு புதிய சாதனம் வெறும் ரூ.10,000 விலை பட்ஜெட்டில் (Budget) அறிமுகமாகவிருக்கிறது. இந்த போனை பிரபலமான இன்பினிக்ஸ் நிறுவனம், இன்பினிக்ஸ் ஹாட் 40i (Infinix Hot 40i) என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் செக்மென்ட் பிரிவு மிகவும் பிரபலமான பிரிவாகவும், மக்களால் அதிகம் விரும்பப்படும் பிரிவாகவும் திகழ்கிறது. இந்த பிரிவை குறித்து வைத்து தான் பல முன்னணி பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், இன்பினிக்ஸ் இந்த ஆண்டு மிகவும் தீவிரமாக இந்த செக்மென்டை குறிவைத்து தாறுமாறாக தாக்கி வருகிறது.

தாராளபிரபு நீங்களா? ஒரு குடும்பத்துக்கு 3 போன் வாங்கலாம் போலயே..

இதன் விளைவாக, நிறுவனம் அடுத்த சில நாட்களின் இன்பினிக்ஸ் ஹாட் 40i (Infinix Hot 40i) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அதன் இன்பினிக்ஸ் ஹாட் 40 (Infinix Hot 40) தொடர் சீரிஸ் கீழ் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தொடரை கடந்த டிசம்பர் 2023 இல் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதில் 3 மாடல்கள் இடம்பெற்றன.

இன்பினிக்ஸ் ஹாட் 40i (Infinix Hot 40i):

இவை இன்பினிக்ஸ் ஹாட் 40 (Infinix Hot 40), இன்பினிக்ஸ் ஹாட் 40i (Infinix Hot 40i) மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ (Infinix Hot 40 Pro) ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது, ​​இந்த ஸ்மார்ட்போன் தொடர் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இதன் கீழ் இன்பினிக்ஸ் ஹாட் 40i ஸ்மார்ட்போனின் அறிமுகம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 40i (Infinix Hot 40i) ஸ்மார்ட்போனின் இந்தியா அறிமுகம் தொடர்பான புதிய தகவல்களும், போனின் விலையும் வெளியாகியுள்ளன. இந்த போன் பிப்ரவரி துவக்க வாரத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 40i பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போனாக வெளிவருகிறது என்பது உறுதியாகியுள்ளது.

தாராளபிரபு நீங்களா? ஒரு குடும்பத்துக்கு 3 போன் வாங்கலாம் போலயே..

இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 40i இன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.10,999 ஆக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இது 8ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவுடன் வருகிறது. Infinix Hot 40i இன் ஊகிக்கப்பட்ட விலையின்படி, இந்தியாவில் 256GB வேரியண்ட் மாடல் மலிவான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக திகழும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 40i சிறப்பம்சம் (Infinix Hot 40i Specifications):
இந்த ஸ்மார்ட்போனில் 720 x 1,612 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.56" இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதன் பேனல் 90Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் 480nits பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது யுனிசாக் T606 (Unisoc T606 SoC) சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

|இந்த புதிய Infinix Hot 40i ஆனது 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் பின்புற கேமரா அமைப்பில் எல்இடி ஃபிளாஷ் பொருத்தப்பட்ட 50MP பிரைமரி கேமரா, 2MP AI லென்ஸுடன் இணைந்த டூயல் கேமராவை கொண்டிருக்கிறது. முன்பக்கத்தில், இது 32MP கொண்ட செல்பி கேமராவை கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 13 உடன் XOS 13.0 இல் செயல்பட வாய்ப்புள்ளது.

இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 40i ஸ்மார்ட்போனின் பேட்டரி பற்றி பேசுகையில், இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது இந்தியாவில் இந்த பிப்ரவரி மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 40i Budget Smartphone Launching Soon In Indian Mobile Market Under Rs 10000 Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X