Home
Mobile

ஆர்டர் அதிரும்.. வெறும் ரூ.13,163 பட்ஜெட்ல 16GB ரேம்.. 1TB மெமரி.. AI கேமரா.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் 16ஜிபி ரேம், 1டிபி மெமரி, 5000mAh பேட்டரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 40 (Infinix Hot 40) மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ (Infinix Hot 40i) மாடல்களை களமிறக்கியிருக்கிறது. இவற்றின் விலை நிர்ணயம் மார்கெட்டை அதிர வைத்துள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 40 அம்சங்கள் (Infinix Hot 40 Specifications): இந்த போனில் 6.78 இன்ச் (1080 x 2460 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 270Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.13,163 பட்ஜெட்ல 16GB ரேம்.. 1TB மெமரி.. AI கேமரா.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி88 எஸ்ஓசி (MediaTek Helio G88 SoC) சிப்செட் வருகிறது. அதோடு எக்ஸ்ஓஎஸ் 13.5 (XOS 13.5) சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த போனில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

அதோடு 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40 போனில் 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. அதோடு டிரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) வருகிறது. ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + ஏஐ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு எல்இடி பிளாஷ் வருகிறது. இந்த போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் ஐபோன்களில் வரும் டைனாமிக் ஐலேண்ட் அம்சத்தை போலவே மேஜிக் ரிங் நோட்டிபிகேஷன் (Magic Ring Notifications) பீச்சர் வருகிறது. இந்த போன் ஸ்டார்லிட் பிளாக், பால்ம் ப்ளூ, ஹரிசோன் கோல்டு மற்றும் ஸ்டார்ஃபால் கிரீன் ஆகிய கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

ரூ.13,163 பட்ஜெட்ல 16GB ரேம்.. 1TB மெமரி.. AI கேமரா.. எந்த மாடல்?

இந்த போன் ஆப்பிரிக்காவின் கானா நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கு இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.13,163ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல கம்மியான பட்ஜெட்டில் இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ போனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் இப்போது, அம்சங்களை பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 40ஐ அம்சங்கள் (Infinix Hot 40i Specifications): இந்த போனில் 6.58 இன்ச் (720 × 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த போனிலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வருகிறது.

அதோடு எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் மேஜிக் ரிங் நோட்டிபிகேஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் வருகிறது. ஆகவே, 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ட் இடம்பெற்றுள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் விலை ரூ.11,288ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் வரும் வாரங்களில் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 40 With Helio G88 Chip, 50MP Camera Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X