Home
Mobile

மார்கெட் மிரளும்.. வெறும் ரூ.14,967 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்தியாவில் பட்ஜெட் போன்களுக்கென தனியிடம் பிடித்த இன்பினிக்ஸ் நிறுவனம், வெறும் ரூ.14,967 விலைக்கு 16ஜிபி ரேம், 108எம்பி கேமரா, ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே போன்ற அம்சங்களை கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ (Infinix Hot 40 Pro) போனை அறிமுகம் செய்துள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ அம்சங்கள் (Infinix Hot 40 Pro Specifications): இந்த போனில் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளேவாகும். இந்த டிஸ்பிளேவில் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) சப்போர்ட் உள்ளது.

 ரூ.14967 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி போன்!

அதோடு மேஜிக் ரிங் நோட்டிபிகேஷன் (Magic Ring Notification) பீச்சர் கொண்ட எக்ஸ்ஓஎஸ் 13.5 (XOS 13.5) கொண்டிருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் எஸ்ஓசி (MediaTek Helio G99 6nm 4G SoC) சிப்செட் வருகிறது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ போனில் 2 மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன.

ஆகவே, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் கூடுதலாக 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் வருகிறது.

இந்த போனின் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) பட்ஜெட்டைவிட பிரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, எல்இடி ஃபிளாஷ் லைட்டுடன் கூடிய 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + ஏஐ (AI) லென்ஸ் இடம் பெற்றுள்ளது. அதேபோல ஃபிளாஷ் சப்போர்ட் கொண்ட 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் கைரோஸ்கோப் (Gyroscope) சப்போர்ட் வருகிறது. அதோடு ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speakers) வருகின்றன. இந்த மாடலில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது.

 ரூ.14967 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி போன்!

இந்த போனில் பிரத்யேகமாக கொடுக்கப்பட்டிருக்கும் மேஜிக் ரிங் நோட்டிபிகேஷன் பீச்சர் மூலம் சார்ஜிங் அனிமேஷன் (Charging Animation), பேட்டரி இன்டிகேஷன் (Battery Indication) ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். அதேபோல பேஸ் அன்லாக் (Face Unlock) செய்து கொள்ளலாம். கேமராவை போலவே பேட்டரி அம்சங்களும் பட்ஜெட்டைவிட பிரீமியமாக இருக்கிறது.

ஆகவே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ போனானது, போட்டரியோடு 199 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. அதேபோல 8.25 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது.

இந்த போனில் ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black), பால்ம் ப்ளூ (Palm Blue), ஹரிசோன் கோல்டு (Horizon Gold) மற்றும் ஸ்டார்ஃபால் கிரீன் (Starfall Green) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த போனின் குளோபல் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.14,967ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.

அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே, இன்பினிக்ஸ் போன்களுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த வேளையில், 16 ஜிபி ரேம், 108 எம்பி கேமரா, மேஜிக் ரிங் பீச்சர், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட இந்த போன் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 40 Pro With 16GB RAM, 108MP Camera Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X