Home
Mobile

அரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.20,000 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

108எம்பி கேமரா, 16ஜிபி ரேம், 33W சார்ஜிங் போன்ற அம்சங்கள் மட்டுமல்லாமல், எக்ஸ்-பூஸ்ட் கேமிங் என்ஜின் டெக்னாலஜியோடு இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ ஃப்ரீ ஃபயர் எடிஷன் (Infinix Hot 40 Pro Free Fire Edition) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் நிறுவனம், அதனுடைய இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ சீரிஸ் (Infinix Hot 40 Series) மாடல்களை நைஜீரியாவில் அறிமுகம் செய்தது. இவற்றின் ஆரம்ப விலையானது, ரூ.10,000 பட்ஜெட்டில் தொடங்கியதால் இந்திய பட்ஜெட் விலை போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது.

ரூ.20,000 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி போன்!

இந்த ஹாட் 40 ப்ரோ சீரிஸ் மாடல்கள் ஜனவரி தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ ஃப்ரீ ஃபயர் எடிஷன் என்னும் மற்றொரு மாடல் வெளியாகி மார்கெட்டை மிரள வைத்துள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ ஃப்ரீ ஃபயர் எடிஷன் அம்சங்கள் (Infinix Hot 40 Pro Free Fire Edition Specifications): இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் கொண்ட 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் எஸ்ஓசி சிப்செட் வருகிறது.

மேஜிக் ரிங் நோட்டிபிகேஷன் (Magic Ring Notification) பீச்சர் வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 1டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.20,000 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி போன்!

108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா + ஏஐ (AI) லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது. 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) வருகிறது.

அதேபோல பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் உள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ ஃப்ரீ ஃபயர் எடிஷன் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) கொண்டுள்ளது. மேஜிக் ரிங் நோட்டிபிகேஷன் பீச்சர் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேகமாக எக்ஸ்-பூஸ்ட் கேமிங் என்ஜின் (X-Boost Gaming Engine) என்னும் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது லேக்-ப்ரீ கேமிங் (Lag Free Gaming) அனுபவத்தை கொடுக்கும். அதோடு ஃப்ரீ ஃபயர் பண்டில் கொடுக்கப்படுகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த போனில் ஸ்டார்லிட் பிளாக் (Starlit Black), பால்ம் ப்ளூ (Palm Blue), ஹரிசோன் கோல்டு (Horizon Gold) மற்றும் ஸ்டார்ஃபால் கிரீன் (Starfall Green) ஆகிய 4 கலர்கள் இருக்கின்றன.

ரூ.20,000 போதும்.. 108MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி போன்!

ஆனால், ஃப்ரீ ஃபயர் எடிஷனில் ஹரிசோன் கோல்டு கலர் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனை வாங்குவோர்களுக்கு 33W சார்ஜர், பேக் சிலிகான் கவர், ஆர்ஜிபி ஃப்ரீ ஃபயர்-பிராண்டட் கூலர், ஃப்ரீ ஃபயர் ஸ்டிக்கர்ஸ், ஸ்பெஷல் கிஃப்ட் கார்ட்ஸ், ஏஆர் செல்ப் போர்ட்ராய்டு ஸ்டிக் போன்றவை கொடுக்கப்படுகிறது.

இந்த போனின் விலை ரூ.20,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த இன்பினிக்ஸ் ஹாட் 40 ப்ரோ ஃப்ரீ ஃபயர் எடிஷன் போனின் விற்பனை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், முதலில் நைஜீரியாவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. அதன்பின் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 40 Pro Free Fire Edition With 108MP Camera Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X