ரூ.10,000-க்கு கீழ் இந்தியாவில் களமிறங்கும் புதிய Infinix போன்: அறிமுக தேதி இதுதான்.!
இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது இந்நிறுவனம் சமீபத்தில் பல பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் வரும் மார்ச் 27-ம் தேதி புதிய Infinix Hot 30i ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும். மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் மீடியாடெக் சிப்செட் வசதியுடன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 50எம்பி டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ வெளிவரும். குறிப்பாக இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த இந்த அசத்தலான இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போனில் அனைத்து அம்சங்களும் சிறப்பாகவே உள்ளது. ஆனால் இந்த போன் 4ஜி வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது இந்திய சந்தையில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. மேலும் இந்த புதிய போன் ரூ.10,000-க்கு கீழ் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய டிஸ்பிளே, தரமான சிப்செட், 50எம்பி கேமரா என அiனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன். ஆனால் 5ஜி வசதியுடன் இந்த போன் வெளிவந்தால் தான் நல்ல வரவேற்பு கிடைக்கும். குறிப்பாக இந்தியாவில் தற்போது 4ஜி போன்களுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை என்றே கூறலாம்.


Click it and Unblock the Notifications








