Home
Mobile

ரூ.8999-விலையில் 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Infinix போன் அறிமுகம்.! நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

இன்பினிக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கம் முதல் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் புதிய Infinix Hot 30i எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

அதாவது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ போன் பெரிய டிஸ்பிளே, அருமையான பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த போன் கருப்பு மற்றும் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது.

 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Infinix போன் அறிமுகம்.!

என்னென்ன அம்சங்கள்? புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1612 × 720 பிக்சல்ஸ், 500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போனில் அசத்தலான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர் உடன் Mali G57 GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.

இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் ஆதரவுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Infinix போன் அறிமுகம்.!

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் மாடல். எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பி வாங்கலாமா, வேண்டாமா?டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய போன் ரூ.8,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனை வாங்கலாம்.

 50எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Infinix போன் அறிமுகம்.!

குறிப்பாக இந்த போனின் மிகப்பெரிய குறை என்னவென்றால், பாஸ்ட் சார்ஜிங் வசதி கிடையாது. அதேபோல் 5ஜி வசதி இதில் இல்லை. தற்போது இந்தியாவில் 5ஜி போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. பின்பு 5எம்பி செல்பி கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். ஆனாலும் பெரிய டிஸ்பிளே, தரமான பிராசஸர், 50எம்பி ரியர் கேமரா, 5000 பேட்டரியுடன் கம்மி விலையில் ஒரு நல்ல 4ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 30i launched in India at a price of Rs.8999: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X