வாரே வா.. பட்ஜெட் விலையில் களமிறங்கும் புதிய Infinix ஸ்மார்ட்போன்.!
இன்பினிக்ஸ் நிறுவனம் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்நிறுவனம் கடந்த மாதம் இன்பினிக்ஸ் நோட் 30ஐ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் இன்பினிக்ஸ் நோட் 30 எனும் புதிய ஸ்மார்ட்போன் மாடலையும் விரைவில் இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 30 போன் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. பின்பு ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் நோட் 30 ஸ்மார்ட்போனின் மாடல் எண் X6833B என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய போன் மீடியாடெக் ஹீலியோ ஜி99பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவரும் எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 13இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும்.
புதிய இன்பினிக்ஸ் நோட் 30 ஸ்மார்ட்போனில் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 x 2460 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் 50எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் நோட் 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் நோட் 30ஐ போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1612 × 720 பிக்சல்ஸ்,500 நிட்ஸ் ப்ரைட்னஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போனில் அசத்தலான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர் உடன் Mali G57 GPU ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த புதிய போன்.
இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் ஆதரவுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக்
கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் போன்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் மாடல். எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
10 வாட்ஸ் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.
டூயல் சிம், 4ஜி, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ ஸ்மார்ட்போன்.
மேலும் இந்த புதிய போன் ரூ.8,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மிகப்பெரிய குறை என்னவென்றால், பாஸ்ட் சார்ஜிங்
வசதி கிடையாது. அதேபோல் 5ஜி வசதி இதில் இல்லை.
தற்போது இந்தியாவில் 5ஜி போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. பின்பு 5எம்பி செல்பி கேமராவுக்கு பதிலாக 13எம்பி கேமராவுடன் இந்த போன்
வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். ஆனாலும் பெரிய டிஸ்பிளே, தரமான பிராசஸர், 50எம்பி ரியர் கேமரா, 5000 பேட்டரியுடன் கம்மி
விலையில் ஒரு நல்ல 4ஜி போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இதை வாங்குவது நல்லது.


Click it and Unblock the Notifications