Home
Mobile

ஒரே போடு! அரண்டுபோன மார்க்கெட்! ரூ.12,499 போதும்.. 120Hz டிஸ்பிளே.. 16GB ரேம், 6000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்தியாவில் முதல்முறையாக ரூ.12,499 விலையில் 16ஜிபி ரேம், 120Hz ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 6000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், மாலி ஜி57 எம்சி2 கிராபிக்ஸ் கார்டு என்று பிரம்மாண்ட அம்சங்களுடன் இன்பினிக்ஸ் ஹாட் 30 (Infinix Hot 30) போன் அறிமுகமாகியிருக்கிறது.

ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் மிட்-ரேன்ஞ் போன்களில் கொடுக்கப்படும் அம்சங்களுடன் போன்களை களமிறக்கி வரும் இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம், இப்போது வெறும் ரூ.12 ஆயிரம் பட்ஜெட்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த போனின் விலையை பார்த்து மற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மிரண்டு போய்விட்டன. இதன் வெளியீட்டு தேதி அன்று பிளிப்கார்ட்டில் தள்ளுபடி வேறு இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ரூ.12,499 விலையில் 120Hz டிஸ்பிளே, 16GB ரேம், 6000mAh பேட்டரி போன்!

இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Hot 30 5G Specifications): இந்த போன் 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் வருகிறது. மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி என்ற 2 வேரியண்ட்களில் வருகிறது. இதில் 4 ஜிபி ரேம் உடன் கூடுதலாக 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் உடன் கூடுதலாக 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது. 1 டிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது.

இந்த ஹாட் 30 போன், 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்டுள்ளது. அதோடு டூயல் எல்இடி ஃப்ளாஷ் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இதற்கு டைப் - சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), டூயல் நானோ சிம் போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜேக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP53 தர ப்ளாஷ் மற்றும் வாட்டர் ரெஜிஸ்டண்ட், 5.2 ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 14 5ஜி பேண்ட் சப்போர்ட், என்எப்சி பேமெண்ட் வசதி உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு அம்சங்கள் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போனின் விலை மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,499 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,499 ஆகவும் இருக்கிறது.

இந்த போன் வரும் ஜூலை 18ஆம் தேதி பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. இந்த தேதி பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் நாட்களில் வருவதால், ரூ.1000 பேங்க் ஆஃபர் வேறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 16 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி கொண்ட போனை வெறும் ரூ.12,499க்கு வாங்கிக்கொள்ள முடியும்.

இந்த போன் விற்பனையில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 30 5G With 16GB RAM, 6000mAh Battery Launched in India Price, Specifications, Sales Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X