மிரள வைக்கும் மாடல்! ரூ.15000 பட்ஜெட்டில் 16GB ரேம், 256GB மெமரி, 6000mAh பேட்டரி! அடுத்த Infinix போன்!
இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி என்ற ஒரேவொரு போன் மூலம் ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் பிடித்த இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம், அதே அம்சங்களுடன் புது மாடலுடன் மீண்டும் களமிறங்குகிறது. இந்த புது மாடலின் டிசைன், அம்சங்களை விட மலிவான விலையே அசர வைக்கிறது.
பட்ஜெட் விலை போன்களில், பைபாஸ் சார்ஜிங், 16 ஜிபி ரேம், மாலி ஜி57 கிராபிக்ஸ் கார்டு, ஜெபிஎல் ஸ்பீக்கர்கள், ஃபாஸ்ட் சார்ஜிங் என்று மிட்-ரேன்ஞ் அம்சங்களை அள்ளிக்கொடுத்து இந்தியாவில் மிகப்பெரும் விற்பனையை எட்டி வருகிறது இன்பினிக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போன், ஜூன் மாதம் வெளியாகி பிரம்மாண்ட வரவேற்பு பெற்றது.

இதன் விற்பனை சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அடுத்த அதிரடிக்கு தயாரான இன்பினிக்ஸ் நிறுவனம், அதே பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி (Infinix Hot 30 5G) என்னும் புது மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் சில அம்சங்கள் கசிந்துள்ளன. ஆகவே, அந்த போனில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Hot 30 5G Specifications): இந்த புது மாடலில், இன்பினிக்ஸ் ஹாட் 30 4ஜி போனில் கொடுக்கப்பட்ட பெரும்பாலான அம்சங்களை கட்டாயம் எதிர்பார்க்கலாம். ஆனால், பேட்டரி, சிப்செட், டிசைன், ரேம் போன்ற முக்கிய அம்சங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
அந்த வகையில், 45W ஃபாஸ்ட சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதேபோல இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனுக்கு மிகப்பெரும் பெயர் வாங்கிக்கொடுத்த பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) டெக்னாலஜி, இந்த போனிலும் வரும் என்று கூறப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் வரும் என்று எதிர்பார்க்கலாம். குறிப்பாக 16 ஜிபி ரேம் கொடுக்கப்படலாம். இதில் 8 ஜிபி ரேம் விர்ச்சுவல் ரேமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மீதமுள்ள அம்சங்கள், இன்பினிக்ஸ் ஹாட் 30 4ஜி போனில் வரும் அம்சங்களாகவே இருக்கும். இப்போது அதை தெரிந்துகொள்வது நல்லது.
இன்பினிக்ஸ் ஹாட் 30 போன், 6.78 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் என்று 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ. 10,000 பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது. ஆகவே, இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி மாடல் கூடுதல் அம்சங்களுடன் ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியாகும் என்று தெரிகிறது. அதைவிட குறைவான விலையில் கூட வெளியாகலாம்.
இந்த போன் ஜூலை 14ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. அப்போதே முழு அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்கள் தெரியவரும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








