Home
Mobile

தெறிக்குது ஆர்டர்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. இன்பினிக்ஸ் போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?

பண்டிகை காலம் என்பதால் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது கூட பிளிப்கார்ட் தளத்தில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

அதுவும் இப்போது பிளிப்கார்ட் தளத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஹாட் 30 (Infinix Hot 30) போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் ரூ.12,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இன்பினிக்ஸ் ஹாட் 30 போனை ரூ.11,499 விலையில் வாங்க முடியும்.

6000mAh பேட்டரி..  இன்பினிக்ஸ் போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?

மேலும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இந்த 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 30 மாடலுக்கு தான் தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன் 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) உடன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம் (Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் வருகிறது. மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.

6000mAh பேட்டரி..  இன்பினிக்ஸ் போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?

சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), டூயல் நானோ சிம் போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜேக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP53 தர ப்ளாஷ் மற்றும் வாட்டர் ரெஜிஸ்டண்ட், 5.2 ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 14 5ஜி பேண்ட் சப்போர்ட், என்எப்சி பேமெண்ட் வசதி உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த போனில் 50எம்பி கேமரா, 5ஜி ஆதரவு, 6000 எம்ஏஎச் பேட்டரி, தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இருப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 30 5G phone is available at 23 percent off on Flipkart: check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X