விஸ்வரூப ஆர்டர்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. கம்மி விலையில் Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?
இன்பினிக்ஸ் நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த அனைத்து போன்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போனுக்கு தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் தற்போது இந்த போனுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.12,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும்.

இப்போது இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம். இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஆனது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 7என்எம்(Octa Core MediaTek Dimensity 6020 7nm) சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன் 6.78 இன்ச் (2460 × 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி(LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் கொடுக்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), டூயல் நானோ சிம் போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜேக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP53 தர ப்ளாஷ் மற்றும் வாட்டர் ரெஜிஸ்டண்ட், 5.2 ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 14 5ஜி பேண்ட் சப்போர்ட், என்எப்சி பேமெண்ட் வசதி உள்ளிட்ட பெரும்பாலான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
6000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50எம்பி கேமரா மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி ஸ்மார்ட்போன் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








