Home
Mobile

ஆர்டர் போடாம விடமாட்டீங்க! ரூ.15000 பட்ஜெட்டில் 16GB ரேம், 256GB மெமரி.. 6000mAh பேட்டரி வேற.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி (Infinix Hot 30 5G) போன் மலிவான பட்ஜெட்டில் 16ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6000mAh பேட்டரி என்று பிரம்மாண்ட அம்சங்களுடன் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

இந்தியாவில் மலிவு விலை போன்களில் பிளாக்ஷிப் அம்சங்களை கொடுத்து மிகப்பெரும் பெயர் பெற்ற இன்பினிக்ஸ் நிறுவனம், அடுத்த ஆட்டத்துக்கு தயாராகிவிட்டது. இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி போனின் அட்டகாச வரவேற்புக்கு பிறகு, இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போனை களமிறக்க உள்ளது. இந்த போனும் ரூ.15 பட்ஜெட்டில், ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள போன்களின் அம்சங்களை கொண்டிருக்கிறது.

சிதறவிடும் மலிவு விலையில் 16GB ரேம், 256GB மெமரி! 6000mAh பேட்டரி வேற!

இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Hot 30 5G Specifications): இந்த இன்பினிக்ஸ் போனில் அதற்கு முந்தைய மாடலான இன்பினிக்ஸ் ஹாட் 30 4ஜி போனில் கொடுக்கப்பட்ட பெரும்பாலான அம்சங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன் அப்டேட்டட் வெர்ஷன் என்பதால், அதன் சிப்செட், பேட்டரி, டிசைன் மற்றும் கலர்களில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

இதுவரையில் கசிந்த அம்சங்களை வைத்து பார்க்கையில், இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி போன் 6000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இதில் 18W ஃபாஸ்ட சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் பைபாஸ் சார்ஜிங் (Bypass Charging) டெக்னாலஜி பயன்படுத்தப்படலாம். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வருவது உறுதியாகிவிட்டது.

அதோடு மீடியாடெக் டைமன்சிட்டி 6080 எஸ்ஓசி (MediaTek Dimensity 6080 SoC) சிப்செட் வர அதிக வாய்ப்புள்ளது. இன்பினிக்ஸ் நோட் 30 போனில் கொடுக்கப்பட்ட 16 ஜிபி ரேம் இந்த போனிலும் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 8 ஜிபி ரேம் விர்ச்சுவலாக வரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா வருவது உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக 14, 5ஜி பேண்ட்கள் சப்போர்ட் இருக்கிறது. அரோரா ப்ளூ (Aurora Blue), மற்றும் க்நைட் பிளாக் (Knight Black) ஆகிய கலர்களில் வருகிறது. இந்த போன் ஜூலை 14ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த போனின் மற்ற அம்சங்களை தெரிந்துகொள்ள இன்பினிக்ஸ் ஹாட் 30 4ஜி போனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இன்பினிக்ஸ் ஹாட் 30 4ஜி போன் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற மாடலாகும். வெறும் ரூ.10 ஆயிரம் பட்ஜெட்டில் 16 ரேம் உடன் வெளியாகி கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கியது.

இந்த போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 580 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது.

மெயின் கேமரா டூயல் ரியர் செட்டப் கொண்டிருக்கிறது. அதன்படி 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.செல்பீ கேமரா 8 எம்பியாக இருக்கிறது. இந்த போனின் விலையே ரூ.10 பட்ஜெட் என்பதால், இப்போது வரவிருக்கும் இன்பினிக்ஸ் ஹாட் 30 5ஜி அம்சங்கள் கூடுதலாக ரூ.2 ஆயிரம் மட்டுமே அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix Hot 30 5G Design, Colour, Launch Date Leaked Here is Price, Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X