ரூ.12,300க்கு இப்படி ஒரு ட்விஸ்ட் எதிர்பார்க்கல: Infinix செய்த தரமான சம்பவம்!

|

ப்ரீமியம் விலை மற்றும் மிட் ரேன்ஜ் விலை என்ற ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் போட்டியை விட மலிவு மற்றும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் போட்டி அதிகமாக இருக்கிறது. உலக சந்தையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வரவேற்பு இருக்கிறது. அனைத்து நிறுவனங்களும் என்னதான் ப்ரீமியம் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தாலும் அவ்வப்போது சிறந்த அம்சங்களுடன் கூடிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது Infinix நிறுவனம் ஒரு பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது.

Infinix Hot 20S

Infinix Hot 20S

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் Infinix Hot 20S ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. மலிவு விலை ஆண்ட்ராய்ட் போனாக இது இருந்தாலும் கேமிங் அனுபவத்திற்கு மேம்பட்ட வகையில் இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் விரைவில் இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனின் அம்சங்கள், விலை குறித்த அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 20எஸ் அம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 20எஸ் அம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 20எஸ் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது தற்போது பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் டிரான்ஸ்ஷன் குழுமத்திற்கு சொந்தமான பிராண்டின் சமீபத்திய ஸ்மார்ட்போன் இதுவாகும். இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

8 ஜிபி ரேம் ஆதரவு

8 ஜிபி ரேம் ஆதரவு

Infinix Hot 20S ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவு இருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனை 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். Infinix Hot 20S இன் பிற அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

சிறந்த கேமிங் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

சிறந்த கேமிங் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

Infinix Hot 20S ஆனது 1,080 X 2,460 பிக்சல்கள் தெளிவுத்திறனுடன் கூடிய 6.78 இன்ச் முழு எச்டி+ ஐபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த புதிய Infinix ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது HyperVision Gaming-Pro என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் இது சிறந்த கேமிங் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது உறுதி செய்யமுடிகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

Infinix Hot 20S ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா இருக்கிறது. குவாட் ரியர் ஃப்ளாஷ் கேமரா அமைப்புடன் 8 எம்பி முன்புற செல்பி கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் டூயல் சிம் கேமரா ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு இடம்பெற்றிருக்கிறது. இதன் எடை 202 கிராம் ஆகும்.

கைரேகை ஸ்கேனர் ஆதரவு

கைரேகை ஸ்கேனர் ஆதரவு

ஆண்ட்ராய்ட் 12 ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. 4ஜி, வைஃபை 802.11, ப்ளூடூத், யூஎஸ்பி டைப்-சி போர்ட் என பல இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இடம்பெற்றுள்ளது.

Infinix Hot 20S விலை

Infinix Hot 20S விலை

Infinix Hot 20S விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு தோராயமாக ரூ.12,300 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது வைட், வயலெட், ப்ளூ மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது.

Infinix Hot 20S இந்தியா

Infinix Hot 20S இந்தியா

டிசம்பர் 1 ஆம் தேதி இந்தியாவில் Infinix Hot 20 5G சீரிஸை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த சீரிஸ் இல் Infinix Hot 20 5G மற்றும் Hot 20 Play ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமாகும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 20 சீரிஸ் இல் Infinix Hot 20S இடம்பெறாமலும் போகலாம் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Infinix Hot 20S Launched with Hyper Vision Gaming Pro Display at Rs.12,300: Best Low Price Gaming Smartphone!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X