இந்தியால அடுத்த மலிவு விலை 5G ஸ்மார்ட்போன் இது தான்.! இந்த Infinix போன் விற்பனை பிச்சுக்க போகுது.!

|

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் அதன் முதல் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் (5G smartphone) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து, அதன் விற்பனையையும் துவங்கவுள்ளது. நாம் இங்கு பேசிக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன் மாடலானது Infinix Hot 20 5G என்ற பெயரில் மிகவும் மலிவு விலையில் பிளிப்கார்ட் வழியாக கிடைக்கப் போகிறது.

புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன்

புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன்

இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் 5ஜி இணக்கத்துடன் மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போனாக மாறப்போகிறது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது கடந்த அக்டோபர் மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது இந்தியச் சந்தையில் கால்பதிக்க ரெடி ஆகிவிட்டது.

ரூ.11,499 விலையில் Oppo Reno 7 5G வாங்கலாமா? எப்படி? குட்டி சான்ஸ் தான் ஆனால் வொர்த்.!ரூ.11,499 விலையில் Oppo Reno 7 5G வாங்கலாமா? எப்படி? குட்டி சான்ஸ் தான் ஆனால் வொர்த்.!

மலிவு விலையில் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் டிவைஸ்

மலிவு விலையில் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் டிவைஸ்

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக ஹாட் சீரிஸ் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நிறுவனம் Infinix Hot 20 Play மாடலையும் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இப்போது மக்களின் கவனம் 5ஜி சாதனங்கள் மீது இருப்பதனால், நிறுவனம் Infinix Hot 20 5G முதலில் வெளியிடுகிறது.

பட்ஜெட்னு வரும் போது எல்லாரும் பட்ஜெட்னு வரும் போது எல்லாரும் "இந்த" போனை தான் வாங்க போறாங்க! ஏன் தெரியுமா?

Infinix Hot 20 5G எப்போது இந்தியாவில் கிடைக்கும்? இதான் தேதி நோட் பண்ணிக்கோங்க.!

Infinix Hot 20 5G எப்போது இந்தியாவில் கிடைக்கும்? இதான் தேதி நோட் பண்ணிக்கோங்க.!

தெரியாதவர்களுக்கு, இந்த Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் கிடைக்கும் என்பதை இன்பினிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல், பிளிப்கார்ட் நிறுவனத்தின் போஸ்டர் தகவல்களும் இதன் அறிமுகத்தை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. சரி, இந்த Infinix Hot 20 5G போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனை என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது 12 5ஜி பேண்ட்களை ஆதரிக்கும் அம்சத்துடன் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக, இன்பினிக்ஸ் ஹாட் சீரிஸ் மாடல்கள் ரூ. 12,000 விலை பிரிவில் வருகிறது. ஆனால், இது 5ஜி போன் என்பதனால் வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

EB கணக்குடன் ஆதார் விபரங்களை இணைப்பது எப்படி? இல்லையென்றால் மின்சாரம் துண்டிக்கப்படுமா?EB கணக்குடன் ஆதார் விபரங்களை இணைப்பது எப்படி? இல்லையென்றால் மின்சாரம் துண்டிக்கப்படுமா?

Infinix Hot 20 5G போனின் சிறப்பம்சம்

Infinix Hot 20 5G போனின் சிறப்பம்சம்

Infinix Hot 20 5G ஆனது 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே பேனலைக் கொண்டுள்ளது. இது 6.6' இன்ச் உடைய முழு HD+ தெளிவுத்திறனை ஆதரிக்கிறது. இது 1900:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோவை ஆதரிக்கிறது மற்றும் வாட்டர் டிராப் நாட்ச் கொண்ட செல்ஃபி ஷூட்டரை கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட்டைக் கொண்டுள்ளது.

என்ன தான் 5G கெத்துனு சொன்னாலும்.. பந்தயத்துல ஜெயிக்கிறது குதிரை 4G தான்.! ஏன் தெரியுமா?என்ன தான் 5G கெத்துனு சொன்னாலும்.. பந்தயத்துல ஜெயிக்கிறது குதிரை 4G தான்.! ஏன் தெரியுமா?

சிப்செட்.. ஸ்டோரேஜ் மற்றும் சாப்ட்வேர் விபரம்.!

சிப்செட்.. ஸ்டோரேஜ் மற்றும் சாப்ட்வேர் விபரம்.!

Dimensity 810 அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட Mali G57 GPU, 4GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் உடன் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டுள்ளது. இது 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் ஆதரிக்கிறது. இது ஆண்ட்ராய்டு 12 ஐ அடிப்படையாகக் கொண்ட XOS 10.6 உடன் இயங்குகிறது.

Samsung செய்த சத்தியம்.! சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்கள் குஷி.! இனி எல்லாமே சூப்பர் பாஸ்ட் தான்.!Samsung செய்த சத்தியம்.! சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்கள் குஷி.! இனி எல்லாமே சூப்பர் பாஸ்ட் தான்.!

Infinix Hot 20 5G கேமரா மற்றும் பேட்டரி விபரம்

Infinix Hot 20 5G கேமரா மற்றும் பேட்டரி விபரம்

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா மற்றும் 2MP சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது சூப்பர் நைட் மோட், போர்ட்ரெய்ட் மோட் போன்ற பல்வேறு கேமரா அம்சங்களை ஆதரிக்கிறது. இது செல்ஃபிக்கு 8MP ஸ்னாப்பரை கொண்டுள்ளது.

Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! "இதை" ரீசார்ஜ் செய்ய ஒரு தனி கெத்து வேணும்.!

Infinix Hot 20 5G விலை என்ன?

Infinix Hot 20 5G விலை என்ன?

Infinix Hot 20 5G ஆனது ஸ்பேஸ் ப்ளூ, பிளாஸ்டர் கிரீன் மற்றும் ரேசிங் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. பாதுகாப்புப் பக்கத்தில், இது ஆற்றல் பொத்தானில் ஒருங்கிணைக்கப்பட்ட பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரை வழங்குகிறது. இது 4ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் தோராயமாக ரூ. 14,000 என்ற விலையில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 20 5G Will Launch On December 1st From Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X