Home
Mobile

போட்றா தம்பி ஆர்டர்.! Infinix Hot 20 5G போனை எல்லோரும் டார்கெட் செஞ்சு தூக்குறாங்க.! ஏன் தெரியுமா?

Infinix நிறுவனம், கடந்த வாரம் இன்பினிக்ஸ் ஹாட் 20 பிளே (Infinix Hot 20 Play) மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி (Infinix Hot 20 5G) ஸ்மார்ட்போன்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து Infinix Hot 20 Play ஆனது இரண்டு நாட்களுக்கு முன்பு முதல் முறையாக விற்பனைக்கு வந்தது, அதனைத் தொடர்ந்து இப்போது இந்த புதிய Infinix Hot 20 5G சாதனம் கம்மி விலை 5ஜி ஸ்மார்ட்போனாக (5G Smartphone) திறந்த விற்பனையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. அதாவது ஓபன் சேல்ஸ் (Open sale) விற்பனையில் கிடைக்கிறது.

மலிவு விலையில் Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிவிட்டதா?

மலிவு விலையில் Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் விற்பனை துவங்கிவிட்டதா?

Infinix Hot 20 5G போனை இப்போது என்ன சலுகையுடன் வாங்கலாம்? என்ன சிறந்த விலையில் எங்கிருந்து வாங்கலாம்? இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது போன்ற விபரங்களைப் பார்க்கலாம்.

இன்று முதல் முறையாக நாட்டில் விற்பனைக்கு வரும் Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் பற்றிய முழு விபரங்கள் இதோ.! Infinix Hot 20 5G என்பது நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை 5G போன் (Most affordable 5G phone) என்பது குறிப்பிடத்தக்கது.

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

புதிய Infinix Hot 20 5G சாதனம் ஆனது 6.6' இன்ச் அளவு கொண்ட முழு HD+ உடன் கூடிய 1080 × 2408 பிக்சல் தீர்மானம் கொண்ட 120Hz IPS LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே பேனல் 180Hz டச் சாம்பிளிங் வீதம், 500nits பீக் பிரைட்னஸ், 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் பாண்டா கிளாஸ் பாதுகாப்பைக் கொண்டுள்ளது.

இந்த டிவைஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி (Infinix Hot 20 5G) ஸ்டோரேஜ் விபரம்

இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி (Infinix Hot 20 5G) ஸ்டோரேஜ் விபரம்

இது 6nm உற்பத்தி செயல்முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் உள்ள கிராபிக்ஸ் பயன்பாட்டிற்காக Mali G57 GPU வழங்கப்பட்டுள்ளது. இது 4ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் (4GB RAM + 64GB) உடன் வருகிறது.

Infinix Hot 20 5G ஆனது ஆண்ட்ராய்டு 12 (android 12) அடிப்படையிலான XOS 10.6 இல் இயங்குகிறது. புதிய Infinix Hot 20 5G ஆனது டூயல் ரியர் கேமரா (dual rear camera) அமைப்புடன் வருகிறது. கேமரா விபரங்களைப் பற்றிப் பேசுகையில்..

இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி போனின் கேமரா எப்படி உள்ளது?

இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி போனின் கேமரா எப்படி உள்ளது?

இதில் 50MP பிரைமரி ஷூட்டர் உள்ளது. சாதனத்தில் உள்ள உயர் தெளிவுத்திறன் கொண்ட சென்சார் ஒரு AI லென்ஸ் மற்றும் டூயல் LED ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள 8MP முன்பக்க செல்பி ஷூட்டர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மலிவு விலையில் பெஸ்டான கேமராவை வழங்குகிறது.

Infinix Hot 20 5G பேட்டரி மாறும் பாதுகாப்பு அம்சங்கள்

Infinix Hot 20 5G பேட்டரி மாறும் பாதுகாப்பு அம்சங்கள்

இது 5000mAh பேட்டரி உடன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை பேக் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சார்ஜிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்திற்காக டைப்-சி போர்ட்டை (Type-C port) நம்பியுள்ளது.

பாதுகாப்புப் பக்கத்தில், இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது. இது பவர் பட்டன் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Infinix Hot 20 5G ஆனது Dolby Atmos ஆடியோவுடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்தியாவின் அடுத்த மலிவு விலை 5G போன் இது தான்.!

இந்தியாவின் அடுத்த மலிவு விலை 5G போன் இது தான்.!

Infinix Hot 20 5G ஆனது பிளாஸ்டர் கிரீன், ஸ்பேஸ் ப்ளூ மற்றும் ரேசிங் பிளாக் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.

இதர இணைப்புகளைப் பொறுத்தவரை, இது இரட்டை சிம், 5G (12 பட்டைகள்), WiFi 802.11 a/b/g/n/ac, Bluetooth 5.0, GPS, Glonass மற்றும் Beidou ஆகியவற்றை வழங்குகிறது.

Infinix Hot 20 5G இந்தியாவில் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி இப்போது பார்க்கலாம்.

Infinix Hot 20 5G போனின் விலை என்ன? எங்கிருந்து வாங்கலாம்?

Infinix Hot 20 5G போனின் விலை என்ன? எங்கிருந்து வாங்கலாம்?

இந்தியாவில் Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் மாடலின் 4GB + 64GB ஸ்டோரேஜிற்கு ரூ.11,999 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இன்று (டிசம்பர் 9) மதியம் 12:00 மணி முதல் ஃப்ளிப்கார்ட் (Flipkart) வழியாக பிரத்தியேகமாக வாங்குவதற்கு கிடைக்கிறது.

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் Flipkart Axis வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 5% கேஷ்பேக்கைப் பெறலாம்.

Infinix Hot 20 5G போனுடன் கிடைக்கும் சலுகை மற்றும் தள்ளுபடி.!

Infinix Hot 20 5G போனுடன் கிடைக்கும் சலுகை மற்றும் தள்ளுபடி.!

இத்துடன் சேர்த்து Flipkart இல் Infinix Hot 20 5G வாங்கும் போது Google Smart Home சாதனங்கள் மீதும் அட்டகாசமான தள்ளுபடி கிடைக்கிறது.

இந்த Infinix Hot 20 5G போனுடன் சேர்த்து கீழே உள்ள டிவைஸ்களை நீங்கள் வாங்கும் போது அதிக பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்.

கூகுள் ஆடியோவை ரூ. 6699 விலையில் வாங்கலாம். கூகுள் நெஸ்ட் ஹப் (2வது ஜெனரல்) டிவைஸை ரூ. 4,999 விலையிலும், கூகுள் நெஸ்ட் மினி சாதனத்தை ரூ. 1,999 விலையிலும் நீங்கள் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Infinix Hot 20 5G Is The Most Affordable 5G-Enabled Smartphone To Buy In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X