இந்த வந்துடுச்சுல கம்மி விலையில் பெஸ்ட் 5ஜி போன்.! Infinix Hot 20 5G விலை என்ன தெரியுமா?

|

இந்த அக்டோபர் மாதத்தில் எந்த நிறுவனம் பிஸியாக இருக்கிறதோ இல்லையோ, Infinix நிறுவனம் படு பிஸியாக இருக்கிறது. சமீபத்தில், இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Zero Ultra என்ற போனை அறிமுகம் செய்தது.

அதனைத் தொடர்ந்து இப்போது நிறுவனம் Infinix Zero 20 என்ற மாடலை அறிவித்தது. இப்போது, புதிதாக நிறுவனம் Infinix Hot 20 5G என்ற புதிய 5ஜி மாடல் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹாட் சீரிஸின் கீழ் முதல் 5ஜி போனா இந்த Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன்.!

ஹாட் சீரிஸின் கீழ் முதல் 5ஜி போனா இந்த Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன்.!

Infinix இப்போது ஹாட் சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யும் புதிய மாடல் தான் Infinix Hot 20 5G ஆகும். இன்பினிக்ஸ் ஹாட் சீரிஸ் வரிசையின் கீழ் அறிமுகம் செய்யப்படும் முதல் 5G இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன், ஹாட் சீரிஸ் வரிசையில் 4ஜி மாடல்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது. சரி, இந்த புதிய சமீபத்திய Infinix Hot 20 5G போனில் என்னவெல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

Infinix Hot 20 5G போன் முக்கிய அம்சங்களின் குயிக் லுக்

Infinix Hot 20 5G போன் முக்கிய அம்சங்களின் குயிக் லுக்

குயிக் ஆக Infinix Hot 20 5G போனில் இருக்கும் முக்கிய அம்சங்களை பற்றி பேசுகையில், இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 810 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் இணைக்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளது.

இந்த Infinix Hot 20 5G சாதனம் 120Hz டிஸ்பிளே, 50MP கேமரா மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்றவற்றை கொண்டுள்ளது. Infinix Hot 20 5G ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?Airtel 5G பயன்படுத்த புது சிம் வேண்டுமா? Jio 5ஜியை விட Airtel 5G எப்படி வேறுபட்டது?

Infinix Hot 20 5G விலை மற்றும் விற்பனை விபரம்

Infinix Hot 20 5G விலை மற்றும் விற்பனை விபரம்

புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஆனது 4GB + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை €180 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் தோராயமாக ரூ. 14,500 விலையை நெருங்குகிறது. இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் இப்போது AliExpress வழியாக வாங்க கிடைக்கிறது.

இந்திய விற்பனை தளங்களில் மிக விரைவில் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Infinix Hot 20 5G சிறப்பம்சம்

Infinix Hot 20 5G சிறப்பம்சம்

இந்த புதிய Hot 20 5G ஸ்மார்ட்போன் 120Hz IPS LCD டிஸ்பிளே பேனலைக் கொண்டுள்ளது. இது 6.6' இன்ச் அளவு கொண்ட முழு HD+ குவாலிட்டி உடன் செயல்படுகிறது. இது 240Hz டச் சாம்பிளிங் வீதத்தை ஆதரிக்கிறது.

இது வாட்டர் டிராப் நாட்ச் உடன் வருகிறது. இந்த புதிய ஹாட் சீரிஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது இந்த ஆண்டு பல பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றது.

உங்களுக்கு Airtel மற்றும் Jio 5G சிக்னல் கிடைக்குதா? உங்க போனில் உடனே இப்படி செக் செய்யுங்க.!உங்களுக்கு Airtel மற்றும் Jio 5G சிக்னல் கிடைக்குதா? உங்க போனில் உடனே இப்படி செக் செய்யுங்க.!

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் மற்றும் OS விபரம்

Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் மற்றும் OS விபரம்

இந்த புதிய Infinix Hot 20 5G ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் அம்சத்துடன் வருகிறது. பயனர்களுக்குத் தேவையான கூடுதல் ஸ்டோரேஜ் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலமாகக் கிடைக்கிறது.

இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையாகக் கொண்ட XOS 10.6 உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் 5ஜி இணக்கத்தை வழங்குகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 20 5G ஸ்மார்ட்போனின் கேமரா விபரம்

இன்பினிக்ஸ் ஹாட் 20 5G ஸ்மார்ட்போனின் கேமரா விபரம்

புதிய இன்பினிக்ஸ் ஹாட் 20 5G ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் சாம்சங் JN1 சென்சார் கொண்ட 50MP பிரைமரி ஷூட்டர் உடன் 2MP செகண்டரி சென்சார் மற்றும் LED ஃபிளாஷ் உடன் வருகிறது.

முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பை ஆதரிக்கும் 8MP ஸ்னாப்பரை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் 50MP கேமரா ஒரு டீசெண்டான ஸ்பெக்ஸ் தான்.

SBI ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமா? இந்த புது விதி உண்மை தானா?SBI ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.173 கட்டணமா? இந்த புது விதி உண்மை தானா?

மலிவு விலை 5ஜி போன்கள் பிரிவி இது மக்களை கவருமா?

மலிவு விலை 5ஜி போன்கள் பிரிவி இது மக்களை கவருமா?

புதிய ஹாட் சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

இந்த சாதனம் டைப்-சி போர்ட் உடன் சைடில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரைக் கொண்டுள்ளது. Infinix Hot 20 5G ஆனது ரேசிங் பிளாக், ஸ்பேஸ் ப்ளூ மற்றும் பிளாஸ்டர் கிரீன் ஆகிய 3 வண்ண விருப்பங்களில் வருகிறது.

மலிவு விலை 5ஜி போன்கள் பிரிவில் இந்த ஸ்மார்ட்போனிற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 20 5G Is The First 5G Enabled Budget Handset Under Hot Lineup Launched

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X