கம்மி விலையில் அறிமுகமான இன்பினிக்ஸ் ஹாட் 12: நம்பி வாங்கலாமா?

|

இன்பினிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 12 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் கம்மி விலைக்கு தகுந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. முதலில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 நீங்கள் எதிர்பார்த்த டிஸ்பிளே

நீங்கள் எதிர்பார்த்த டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளேவை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 போன் அருமையாக பயன்படும். அதாவது இந்த போன் 6.82-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஆனால் இந்த போன் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும். குறிப்பாக இப்போது வரும் போன்கள் அனைத்துமே ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் தான் வெளிவருகின்றன.

அதேபோல் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 460 நிட்ஸ் ப்ரைட்னஸ், Eye Care mode, 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

 சிப்செட் எப்படி?

சிப்செட் எப்படி?

பட்ஜெட் விலை போனுக்கு தகுந்த சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஹாட் 12 மாடல். அதாவது இந்த போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். அதேபோல் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த உதவும் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 போன். இருந்தபோதிலும் இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்காது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹீலியோ ஜி95 சிப்செட் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்திருந்தால் நல்ல கேமிங் அனுபவம் கிடைத்திருக்கும். ஆனால் இந்த ஹீலியோ ஜி37 சிப்செட் சிறந்த கேமிங் அனுபவத்தை
கொடுக்காது.

மேலும் XOS 10 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் மாடல்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

ட்ரிபிள் ரியர் கேமரா

ட்ரிபிள் ரியர் கேமரா

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + ஏஐ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

கண்டிப்பாக இந்த 50எம்பி கேமரா அனைத்து இடங்களிலும் துல்லியமாக படங்களை எடுக்க உதவும். அதேசமயம் டெப்த் சென்சார் மற்றும் ஏஐ கேமராபோன்றவை ஒரளவு பயன்படும் அவ்வளவு தான். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் போன்.

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன்.

IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?

சூப்பரான பேட்டரி

சூப்பரான பேட்டரி

இன்பினிக்ஸ் ஹாட் 12 போனில் உள்ள மிகவும் சிறப்பான வசதி என்னவென்றால், அது பேட்டரி தான். அதாவது இந்த போன் 6000 எம்ஏஎச் பேட்டரி
ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் வெளிவந்துள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன். குறிப்பாகஇந்தபோன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு ஆங்கிளில் சந்திர கிரகணத்தை யாரும் பார்த்திருக்க முடியாது.. NASA வெளியிட்ட வீடியோ..இப்படி ஒரு ஆங்கிளில் சந்திர கிரகணத்தை யாரும் பார்த்திருக்க முடியாது.. NASA வெளியிட்ட வீடியோ..

அட்டகாசமான கனெக்டிவிட்டி

அட்டகாசமான கனெக்டிவிட்டி

அதேபோல் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பயன்படுத்தும் போன் இதுதான்- ஐபோன் இல்ல., அவரே இதைதான் யூஸ் பண்றாரு!

 வியக்கவைக்கும் விலை

வியக்கவைக்கும் விலை

இந்த போன் எக்ஸ்ப்ளோரேட்டரி ப்ளூ, போலார் பிளாக், பர்பிள் மற்றும் டர்க்கைஸ் சியான் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும ஆகஸ்ட் 23-ம் தேதி இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 12 ஸ்மார்ட்போனை ரூ.9,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக மலிவு விலையில் நல்ல போனை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது நல்ல தேர்வாகும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Infinix Hot 12 Review in Tamil: Camera, Battery, Price, Availability Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X