தரமான அம்சங்களுடன் விரைவில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன்.!
இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும். இப்போது ஆன்லைனில் கசிந்த இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும்என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான சாதனம் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

அதேபோல் ரெட்மி 10 ப்ரைம் ஸ்மார்ட்போனில் இருக்கும் அதே சிப்செட் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதாவது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் சாதனம்.எனவே இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக 4ஜிபி ரேம் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஸ்மார்ட்போன் ரூ.9,999-விலையிலும், 6ஜிபி ரேம் கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் மாடல் ரூ.10,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதுதவிர இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் சாதனத்தின் மற்ற அம்சங்கள் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. மேலும் இப்போது ஆன்லைனில் வெளிவந்த ரெட்மி 10 ப்ரைம் ஸ்மார்ட்போனின்அம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ்,கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 10 பிரைம்
ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிப்செட் வசதியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் ரெட்மி 10 பிரைம்.

குறிப்பாக இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் 5ஜி ஆதரவுடன் வெளிவராது. அதாவது 4ஜி ஆதரவுடன் ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும்
3.5 மிமீ ஹெட்போன் ஜாக்உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு
அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications