Home
Mobile

48எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 11.!

இன்பினிக்ஸ் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

48எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 11.!

இந்நிலையில் இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் தனது இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் 48எம்பி ரியர் கேமரா, தனித்துவமான மென்பொருள் வசதி எனப் பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில சிறப்பம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போன் மாடல் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் 720x1,640 பிக்சல் தீர்மானம், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த பார்த்த மீடியாடெக் எம்டி6769 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 11.!

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8 எம்பி செல்பி கேமரா இவற்றுள் அடக்கம். பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

48எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 11.!

இன்பினிக்ஸ் ஹாட் 11 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18-வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன். மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

48எம்பி கேமராவுடன் விரைவில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 11.!

இன்பினிக்ஸ் ஹாட் 10 விவரக்குறிப்புகள்
6.78' இன்ச் எச்டி பிளஸ் பின்-ஹோல் டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ ஜி70 ஆக்டா கோர் பிராசஸர்
எக்ஸ்ஓஎஸ் 7 ஸ்கின் உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ்
எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
AI குவாட் கேமரா அமைப்பு
16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 சிஎம் மேக்ரோ லென்ஸ்
இரண்டு 2 மெகா பிக்சல் கொண்ட சென்சார்கள்
8 மெகா பிக்சல் செல்பி கேமரா
கைரேகை சென்சார்
வைஃபை
டூயல் 4 ஜி வோல்ட்-இ
ஜி.பி.எஸ்
புளூடூத்
3.5 மிமீ ஆடியோ ஜாக்
10W சார்ஜிங் ஆதரவு
5,200 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Infinix Hot 11 May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X