பட்ஜெட் விலையில் அறிமுகமாகிறதா Infinix Hot 10T ஸ்மார்ட்போன்.. விலை என்ன தெரியுமா?

|

Infinix நிறுவனத்தின் ஹாட் 10 ஸ்மார்ட்போன் தொடரில் புதிய மாடலாக மே 5 செவ்வாயன்று இன்பினிக்ஸ் ஹாட் 10 டி அறிமுகப்படுத்தப்பட்டது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 சீரிஸ் ஏற்கனவே இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 எஸ் மற்றும் கடந்த மாதம் அறிமுகமான ஹாட் 10 எஸ் என்எப்சி உள்ளிட்ட சில மாடல்களைக் கொண்டுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 10T இன் முக்கிய சிறப்பம்சங்கள் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 டி ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஹாட் 10 டி ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 70 சிப்செட் உடன் வருகிறது. இது வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​டிஸ்ப்ளே நாட்ச் கொண்டுள்ளது. அடிப்படையில், ஹாட் 10 டி மாடல் ஹாட் 10 எஸ் என்எப்சிக்கு ஒத்ததாக இருக்கிறது. இந்த புதிய சாதனம் வேறுபட்ட சிப்செட்டைக் கொண்டுள்ளது மற்றும் NFC ஆதரவு இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்பினிக்ஸ் ஹாட் 10 டி ஸ்மார்ட்போனின் விலை தகவல் மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10 டி ஸ்மார்ட்போனின் விலை

இன்பினிக்ஸ் ஹாட் 10 டி ஸ்மார்ட்போனின் விலை

இன்பினிக்ஸ் ஹாட் 10 டி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாறுபாட்டிற்கான விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 10,700 விலையில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொலைபேசியில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலும் உள்ளது, இதன் விலை தோராயமாக ரூ.12,000 விலையில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 டி தற்போது கென்யாவில் பிளாக், ஹார்ட் ஆஃப் ஓஷன், மொராண்டி கிரீன் மற்றும் பர்பிள் வண்ணங்களில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

இன்பினிக்ஸ் ஹாட் 10 டி சிறப்பம்சம்

இன்பினிக்ஸ் ஹாட் 10 டி சிறப்பம்சம்

இந்திய சந்தையில் இதன் வருகை குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, வரும் வாரத்தில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விபரங்கள் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 10 டி சிறப்பம்ச விபரங்கள் பற்றி இப்போது பார்க்கலாம், இந்த சாதனம் டூயல் நானோ சிம் உடன் அண்ட்ராய்டு 11 மேல் XOS 7.6 உடன் வருகிறது. புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 டி ஸ்மார்ட்போன், 6.82 இன்ச் எச்டி பிளஸ் உடன் கூடிய 720 x 1,640 பிக்சல்கள் கொண்ட டிசிப்பிளேவை கொண்டுள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 70 சிப்செட்

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 70 சிப்செட்

இது ஹூட்டின் கீழ், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 70 சிப்செட் உள்ளது. அதோடு 4 ஜிபி ரேம் தரநிலையாக உள்ளது. இந்த தொலைப்பேசி மூன்று மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பையும், 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் ஏஐ லென்ஸையும் கொண்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பும் குவாட் எல்இடி ப்ளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு, இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 டி முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் கொண்டுள்ளது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு

இன்பினிக்ஸ் ஹாட் 10 டி 128 ஜிபி வரை உள் சேமிப்பிடத்தைக் கொண்டுள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (512 ஜிபி வரை) பிரத்தியேக ஸ்லாட் மூலம் விரிவாக்கக்கூடியது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூ.எஸ்.பி மற்றும் 3.5 ஆடியோ ஜாக் ஆகியவை இதில் இருக்கிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியச் சந்தையில் அதிக வரவேற்பு இருக்கும் நேரத்தில் நிறுவனம் இந்த சாதனத்தை வெளியிடுவது நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infinix Hot 10T With Triple Rear Cameras Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X