யாரும் வருந்த வேணாம்., நாங்க இருக்கோம்- இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் விலை குறைப்பு- 6000mAh பேட்டரி, 48Mp கேமரா!

|

இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை தற்போது பிளிப்கார்ட்டில் பிரதிபலிக்கிறது. இந்த சாதனம் இந்தாண்டு மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.500 குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் விலைக்குறைப்பு

இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் விலைக்குறைப்பு

இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் விலைக்குறைப்புக்கு பிறகு இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் என இரண்டு வகைகளில் வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் ரூ.500 வரை விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வேரியண்ட்களில் ஸ்மார்ட்போன்கள்

இரண்டு வேரியண்ட்களில் ஸ்மார்ட்போன்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் ஸமார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.9,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,499 ஆக இருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.10,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,499 ஆக இருக்கிறது.

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் கடந்த மே மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது. குறிப்பாக பட்ஜெட் விலையில் வெளிவந்தது இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன். இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தது.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85, 12என்எம் சிப்செட் உடன் கார்டெக்ஸ்-ஏ75 கோர் வசதியும் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்படுகிறது.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + ஏஐ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் மாடல். பின்பு 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு மற்றும் சிறப்பானஅம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

4ஜிபி/6ஜிபி ரேம்

4ஜிபி/6ஜிபி ரேம்

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்தது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், டி.டி.எஸ் ஆடியோ மற்றும் டார்-லிங்க்அல்டிமேட் கேம் பூஸ்டர் போன்ற அம்சங்களும் இருப்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். வைஃபை, 4ஜி வோல்ட்இ, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் விரைவில்

இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் விரைவில்

இதற்கிடையில், இன்பினிக்ஸ் ஹாட் 11 எஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சரியான வெளியீட்டு தேதி வெளியிடப்படவில்லை. இருப்பினும், இன்பினிக்ஸ் போன் மீடியாடெக் ஹீலியோ ஜி 88 உடன் நிரம்பியிருப்பதை உறுதி செய்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infinix Hot 10s Smartphone Gets Price Cut in India: Reflects on Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X