இன்று சலுகையுடன் விற்பனைக்கு வந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.!

|

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் மாடலை ரூ.9,999-விலையில் வாங்க முடியும்.

 64ஜிபி மெமரி

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.குறிப்பாக இன்று முதல் விற்பனை என்பதால் ரூ.500 வரை சலுகை கிடைக்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ்

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

10 நிமிடம் சார்ஜ் 10 மணிநேரம் ஆயுள்- அட்டகாச போட் ராக்கர்ஸ் இயர்போன்கள்: விலை ரொம்ப மலிவு!10 நிமிடம் சார்ஜ் 10 மணிநேரம் ஆயுள்- அட்டகாச போட் ராக்கர்ஸ் இயர்போன்கள்: விலை ரொம்ப மலிவு!

ம். மேலும்

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85, 12என்எம் சிப்செட் உடன் கார்டெக்ஸ்-ஏ75 கோர் வசதியும் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + ஏஐ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் மாடல். பின்பு 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு மற்றும் சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின்கேமராக்கள்.

UFO வீடியோ பற்றி பென்டகன் ஒப்புக்கொண்ட உண்மை.. இன்னும் என்னவெல்லாம் நமக்கு தெரியாம இருக்கோ?UFO வீடியோ பற்றி பென்டகன் ஒப்புக்கொண்ட உண்மை.. இன்னும் என்னவெல்லாம் நமக்கு தெரியாம இருக்கோ?

 ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில்

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ. 3,899 விலையில் கிடைக்கும் முதல் 4G ஸ்மார்ட்போன் இது தான்.. ஜியோவின் ரூ.3000 சலுகையும் இருக்கு..ரூ. 3,899 விலையில் கிடைக்கும் முதல் 4G ஸ்மார்ட்போன் இது தான்.. ஜியோவின் ரூ.3000 சலுகையும் இருக்கு..

ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 6000

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், டி.டி.எஸ் ஆடியோ மற்றும் டார்-லிங்க்அல்டிமேட் கேம் பூஸ்டர் போன்ற அம்சங்களும் இருப்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாகஇருக்கும்.

ஆன்லைன் வகுப்புகளுக்கு கடும் கட்டுப்பாடு: இனி இந்த விதிமுறைகள் கட்டாயம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!ஆன்லைன் வகுப்புகளுக்கு கடும் கட்டுப்பாடு: இனி இந்த விதிமுறைகள் கட்டாயம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

4ஜி வோல்ட்இ, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ

வைஃபை, 4ஜி வோல்ட்இ, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infinix Hot 10S Sale Starts Today in India: Price, Offers and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X