48எம்பி பிரைமரி கேமராவுடன் இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 11

ஆண்ட்ராய்டு 11

இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85, 12என்எம் சிப்செட் உடன் கார்டெக்ஸ்-ஏ75 கோர் வசதியும் இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- "இந்த 8 செயலி ரொம்ப மோசம்" பயனர்களின் தகவல், பணம் மோசடி!

 8எம்பி செல்பீ கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + ஏஐ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் மாடல். பின்பு 1080 பிக்சல் வீடியோ பதிவு ஆதரவு மற்றும் சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின்கேமராக்கள்.

Augmented reality போன்ற வசதியுடன் சலூன் கடையை திறக்க அமேசான் திட்டம்.! எங்கே தெரியுமா?Augmented reality போன்ற வசதியுடன் சலூன் கடையை திறக்க அமேசான் திட்டம்.! எங்கே தெரியுமா?

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ்

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

நமக்குனு சொந்தமா பூமிக்கு மேல் ஒரு விண்வெளி மையம் அமைக்கிறோம்: ரஷ்யாவின் மெர்சல் முடிவு!நமக்குனு சொந்தமா பூமிக்கு மேல் ஒரு விண்வெளி மையம் அமைக்கிறோம்: ரஷ்யாவின் மெர்சல் முடிவு!

டி.டி.எஸ் ஆடியோ

இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், டி.டி.எஸ் ஆடியோ மற்றும் டார்-லிங்க் அல்டிமேட் கேம் பூஸ்டர் போன்ற அம்சங்களும் இருப்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..

ளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ

வைஃபை, 4ஜி வோல்ட்இ, புளூடூத், ஜி.பி.எஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூ.எஸ்.பி போர்ட் மற்றும் எஃப்.எம் ரேடியோ உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.9,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infinix Hot 10S Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X