விரைவில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட் 10ஐ- இதோ அம்சங்கள், விலை!

|

இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் ஹாட் சீரிஸ் தொடரில் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஹாட் 10ஐ என்ற பெயருடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கூகுள் ப்ளே கன்சோல் பட்டியலுடன் காணப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சில அம்சங்களையும் சாதனம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே இந்தோனேசிய தொலைத்தொடர்பு சான்றிதழ் இணையதள சான்றிதழில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் எந்த விவரங்களும் இதுவரை நிறுவனம் வெளியிடவில்லை.

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஐ ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஐ ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் மாதிரி எண் இன்பினிக்ஸ் எக்ஸ் 658பி கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே கன்சோல்படி, இந்த ஸ்மார்ட்போன் செல்பி கேமராவிற்கு பஞ்ச்ஹோல் வடிவமைப்போடு வரும் என தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 720 x 1600 பிக்சல் தெளிவுத்திறன் அம்சத்தோடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியா டெக் ஹீலியோ ஏ20 செயலி

ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் ஜோடியா மீடியா டெக் ஹீலியோ ஏ20 செயலியோடு இயங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இன்பினிக்ஸ் ஹாட் 10ஐ ஸ்மார்ட்போன் கேமரா மற்றும் பிற அம்சங்கள் தற்போதுவரை தெளிவாக தெரியவில்லை. விரைவில் இந்த தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

அதேபோல் நோட் 10 ப்ரோ என்பது இன்பினிக்ஸ் வரவிருக்கும் சாதனங்களின் மற்றொரு மாடல் ஆகும். நோட் ப்ரோ அனைத்து அம்சங்களும் அதன் பெட்டிகளில் வெளிவந்தன. இந்த ஸ்மார்ட்போன் 6.9 இன்ச் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் 90 ஹெர்ட் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி85 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்போடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

மீடியாடெக் ஹீலியோ ஜி90டி எஸ்ஓசி மூலம் சாதனம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரியோடு வரும் எனவும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மூலம் இயக்கப்படும் எனவும் இது 64எம்பி முதன்மை கேமராவோடு வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சாதனம் பின்புறத்தில் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 16 எம்பி கேமரா கொண்டிருக்கும் எனவும் இடைநிலை சாதனமாக இது இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 விவரக்குறிப்புகள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான இன்பினிக்ஸ் ஹாட் 10 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

  • 6.78' இன்ச் எச்டி பிளஸ் பின்-ஹோல் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி70 ஆக்டா கோர் பிராசஸர்
  • எக்ஸ்ஓஎஸ் 7 ஸ்கின் உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ்
  • எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
  • குவாட் கேமரா அமைப்பு
  • AI குவாட் கேமரா அமைப்பு
  • 16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
  • 8 சிஎம் மேக்ரோ லென்ஸ்
  • இரண்டு 2 மெகா பிக்சல் கொண்ட சென்சார்கள்
  • 8 மெகா பிக்சல் செல்பி கேமரா
  • கைரேகை சென்சார்
  • வைஃபை
  • டூயல் 4 ஜி வோல்ட்-இ
  • ஜி.பி.எஸ்
  • புளூடூத்
  • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
  • 10W சார்ஜிங் ஆதரவு
  • 5,200 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Infinix Hot 10I Smartphone May Launching Soon With this Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X