ஏப்ரல் 19: இந்தியாவில் களமிறங்கும் இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே.!
இன்பினிக்ஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவில் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சிறந்த மென்பொருள் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் ஆனது 6.82- இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது. மேலும் 720x1,640 பிக்சல் தீர்மானம், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்.
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த பார்த்த கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்பி ப்ரைமரி கேமரா + ஏ ஐ லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 8 எம்பி செல்பி கேமரா இவற்றுள் அடக்கம். பின்பு எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
இன்பினிக்ஸ் ஹார்ட் 10 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10-வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன். மேலும் இந்நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம் செய்த இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.இன்பினிக்ஸ்

ஹாட் 10 ஸ்மார்ட்போன் ஓஷன் வேவ், அம்பர் ரெட், அப்சிடியன் பிளாக் மற்றும் மூன்லைட் ஜேட் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 விவரக்குறிப்புகள்
6.78' இன்ச் எச்டி பிளஸ் பின்-ஹோல் டிஸ்பிளே
மீடியாடெக் ஹீலியோ ஜி70 ஆக்டா கோர் பிராசஸர்
எக்ஸ்ஓஎஸ் 7 ஸ்கின் உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ்
எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்
AI குவாட் கேமரா அமைப்பு
16 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 சிஎம் மேக்ரோ லென்ஸ்
இரண்டு 2 மெகா பிக்சல் கொண்ட சென்சார்கள்
8 மெகா பிக்சல் செல்பி கேமரா
கைரேகை சென்சார்
வைஃபை
டூயல் 4 ஜி வோல்ட்-இ
ஜி.பி.எஸ்
புளூடூத்
3.5 மிமீ ஆடியோ ஜாக்
10W சார்ஜிங் ஆதரவு
5,200 mAh பேட்டரி


Click it and Unblock the Notifications