ரூ. 8,499 விலையில் மிரட்டலான அம்சங்களுடன் புதிய Infinix Hot 10 Play.. எப்போ வாங்கக் கிடைக்கும்?

|

ஹாங்காங்கை தளமாகக் கொண்ட டிரான்சியன் குழுமம் தனது புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் சக்தி கொண்ட பெரிய பேட்டரியுடன் வருகிறது. இந்த புதிய சாதனம் 6.82' இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த புதிய ஸ்மார்ட்போன் நம்ப முடியாத மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே

புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே

புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் தற்பொழுது ஒற்றை வேரியண்ட் மாடலாக நான்கு அட்டகாசமான வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்துடன் வருகிறது. புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 ப்ளே ஸ்மார்ட்போனின் விலை பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் மொராண்டி கிரீன், 7 டிகிரி பர்பில், ஏஜியன் ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக் ஆகிய நான்கு வண்ண வகைகளில் வருகிறது.

எப்போ? எங்கே வாங்கலாம்?

எப்போ? எங்கே வாங்கலாம்?

இந்த அட்டகாசமான இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்த புதிய சாதனம் முதல் அறிமுக விற்பனை நேரத்தில் சில குறிப்பிட்ட சலுகையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலிவு விலையில் அனைத்து முக்கிய அம்சங்களுடன் புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இன்பினிக்ஸ் ஹாட் 10 பிளே ஒரு அற்புதமான சாய்ஸ் ஆகும்.

உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன்.. வனத்தில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருள் வீடியோ..

இன்பினிக்ஸ் ஹாட் 10 ப்ளே சிறப்பம்சம்

இன்பினிக்ஸ் ஹாட் 10 ப்ளே சிறப்பம்சம்

இந்த சாதனம் 6.82 இன்ச் கொண்ட எச்டி பிளஸ் 720x1640 பிக்சல்கள் தீர்மானம் உடைய டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மேல்-இடது மூலையில் ஒரு பஞ்ச்-ஹோல் நாட்ச்சை முன்பக்க கேமரா உடன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 ஆக்டா கோர் சிப்செட் உடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படுகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாகக் கூடுதல் ஸ்டோரேஜை அனுமதிக்கிறது.

AI லென்ஸ் உடன் கேமரா அம்சம்

AI லென்ஸ் உடன் கேமரா அம்சம்

கேமரா அம்சத்தை பற்றி பார்க்கையில், இது முன்புறத்தில் ஒற்றை கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இது 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் குவாட்-ரியர் ஃபிளாஷ் உடன் AI லென்ஸ் ஆகியவற்றின் கலவையுடன் இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை, 8 மெகாபிக்சல் சென்சார் பஞ்ச் ஹோல் நாட்ச் உடன் முன்பக்க ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. AI லென்ஸ் வழங்கப்பட்டுள்ளதால் புகைப்படம் மற்றும் வீடியோ மிகவும் துல்லியமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.!

10W சார்ஜிங் ஆதரவுடன் 6000 எம்ஏஎச் பேட்டரி

10W சார்ஜிங் ஆதரவுடன் 6000 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 ப்ளே ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் இயங்குகிறது, நிறுவனத்தின் தனிப்பயன் எக்ஸ்ஓஎஸ் 7 அதன் மேல் இயங்குகிறது. இது மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் வழியாக 10W சார்ஜிங் ஆதரவுடன் 6000 எம்ஏஎச் பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது. பின்புறமாகப் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்அம்சத்துடன் இதில் ஃபேஸ் அன்லாக் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இது வெறும் ரூ.8,499 விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Infinix Hot 10 Play launched in India at Just Rs 8499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X