Home
Mobile

இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

இன்ஃபினிக்ஸ் அதன் பட்ஜெட்டை ஸ்மார்ட்போன் வரிசையில் மீண்டும் ஒரு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 10 மாடலை தொடர்ந்து, நிறுவனம் இப்போது இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல் கென்யாவில் நுழைவு நிலை மீடியா டெக் ஹீலியோ செயலி மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பு போன்ற அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

இன்பினிக்ஸ் ஹாட் 10 லைட் முழு விவரக்குறிப்பு
இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 லைட் ஸ்மார்ட்போன் 6.78' இன்ச் அளவைக் கொண்ட எல்சிடி டிஸ்ப்ளேவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு HD பிளஸ் தெளிவுத்திறனை வழங்குகிறது. நிறுவனம் ஸ்மார்ட்போனின் எந்த அதிகாரப்பூர்வ படத்தையும் வெளியிடவில்லை என்பதால், இது பஞ்ச்-ஹோல் அல்லது வாட்டர் டிராப் நாட்ச் உடன் இருக்கிறதா என்று சொல்ல முடியவில்லை.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 லைட் ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போர்டில் உள்ள சென்சார்கள் 13MP முதன்மை சென்சார், 2MP இரண்டாம் நிலை சென்சார் மற்றும் பொக்கே விளைவுகளுக்கான மற்றொரு 2MP சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, சாதனம் முன்பக்கத்தில் 8MP கேமராவைக் கொண்டுள்ளது.

இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 லைட் ஸ்மார்ட்போன் மீடியா டெக் ஹீலியோ ஏ 20 நுழைவு நிலை செயலியை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 லைட் ஸ்மார்ட்போன் 2 ஜிபி / 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி / 64 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. உள் சேமிப்பை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கலாம்.

ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய எக்ஸ்ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இந்த சாதனம் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் விருப்பங்களுடன் வருகிறது. இது 10W பாஸ்ட் சார்ஜிங் உடன் கூடிய 5,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 லைட் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வெறும் ரூ. 7139 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 10 Lite Entry-Level Smartphone Goes Official Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X