Infinix Hot 10 இந்தியாவில் வரும் அக்டோபர் 4ல் அறிமுகமா? விலை என்னவாக இருக்கும்?

|

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஹாட் 10 என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை வரும் அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய போனின் விலை மாறும் சிறப்பம்சங்கள் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன்

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் மாடல் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த சாதனம் மூன்று வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் தோராயமாக ரூ .9,302 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் தோராயமாக ரூ. 10,631 என்ற விலையில் வருகிறது.

ஹை-வேரியண்ட் விலை என்ன?

ஹை-வேரியண்ட் விலை என்ன?

இன்பினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் மாடலின் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் தோராயமாக வெறும் ரூ. 11,517 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு, எந்த வேரியண்ட்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பது சரியாக தெரியவில்லை. ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக், மூன்லைட் ஜேட், ப்ளூ மற்றும் பர்பில் கலர் விருப்பங்களில் வருகிறது.

கூகிள் எச்சரிக்கை: ஆபத்தான 17 ஆப் பட்டியல்- யோசிக்காம உடனே டெலிட் செய்யுங்கள்!கூகிள் எச்சரிக்கை: ஆபத்தான 17 ஆப் பட்டியல்- யோசிக்காம உடனே டெலிட் செய்யுங்கள்!

இன்பினிக்ஸ் ஹாட் 10 விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 10 விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

இன்பினிக்ஸ் ஹாட் 10 மீடியாடெக் ஹீலியோ ஜி 70 ஆல் இயக்கப்படும், மேலும் 720x1640 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.78' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேயுடன், பஞ்ச்-ஹோல் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முதன்மை சென்சார், இரண்டு 2 மெகாபிக்சல் சென்சார்கள் மற்றும் AI லென்ஸின் கலவையுடன் குவாட் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், 8 மெகாபிக்சல் சென்சார் வைக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ் அன்லாக் கூட உண்டா?

ஃபேஸ் அன்லாக் கூட உண்டா?

அண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கூட எக்ஸ்ஓஎஸ் 7 மூலம் ஹாட் 10 இயங்குகிறது, இதில் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட் வழியாக 10W சார்ஜிங் ஆதரவுடன், 5200 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் ஆதரிக்கிறது. வைஃபை, 4 ஜி, ஜி.பி.எஸ், புளூடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் 4ம் தேதி நிறுவனம் களமிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Infinix Hot 10 launching in India on Oct 4 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X