ரூ.5,999 மட்டுமே: 5000 எம்ஏஎச் பேட்டரியோடு இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 இந்தியாவில் அறிமுகம்!
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் ஐபிஎஸ் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, உச்சநிலை செல்பி கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை மிகவும் மலிவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன்
இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.5,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரே ரேம் வேரியண்ட் மற்றும் மூன்று வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

டிசம்பர் 24 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனை
இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன் டிசம்பர் 24 முதல் பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் இருக்கிறது. மேலும் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

உச்சநிலை செல்பி கேமரா வசதி
இன்பினிக்ஸ் எச்டி ஸ்மார்ட் 2021 ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 6.1 இன்ச் ஐபிஎஸ் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 720x1560 பிக்சல் தெளிவுத்திறனுடன் வருகிறது. மேலும் இது உச்சநிலை செல்பி கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

பின்புறத்தில் கைரேகை சென்சார்
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புறத்தில் கைரேகை சென்சார் மற்றும் பேஸ்அன்லாக் அம்சம் இருக்கிறது. இதன் கேமரா அமைப்பை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் பிரதான 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் இரட்டை எல்இடி ஃபிளாஷ் உள்ளிட்டவை இருக்கிறது. முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 ஸ்மார்ட்போனானது 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் உள்ளது. இதன்மூலம் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

5000 எம்ஏஎச் பேட்டரி
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் எச்டி 2021 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதில் 5 வாட்ஸ் வரை சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications