செஞ்சி விட்டாப்ல.. 6500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ (Infinix GT 50 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பிரஷர் சென்ஸ் ஜிடி டிரிக்கர், ஹைபிரிட்ப்ளோவ் லிக்விட் கூலிங் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், டைமன்சிட்டி 8400 அல்டிமேட் 4என்எம் சிப்செட் கொடுத்துள்ளது.
சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் லெவலில் கேமிங் பீச்சர்களை கொடுக்கும்படி இந்த இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. பிரஷர் சென்ஸ் ஜிடி டிரிக்கர், ஹைபிரிட்ப்ளோவ் லிக்விட் கூலிங், ஜிடி மேக்சார்ஜ் கூலர் 2.0 போன்ற ஹார்டுவேர் கேமிங் பீச்சர்கள் மற்றும் என்1 நெட்வொர்க் சிப், 144FPS கேமிங் அவுட்புட் போன்ற சாப்ட்வேர் லெவல் பீச்சர்களும் உள்ளன.

இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 50 Pro Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8400 Ultimate 4nm) சிப்செட்டை இந்த இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) கிடைக்கிறது.
3 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட 6.78 இன்ச் (1208 x 2644 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.
மேலும், 330Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. அவுட்டோரிலும் பட்டையை கிளப்பும்படி 4500 நிட்ஸ் பீக் பிரைனஸ் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்காக 2800Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 144 FPS கேமிங் அவுட்புட் இந்த ஜிடி 50 ப்ரோ மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
ஹார்ட்வேர் லெவல் கேமிங் பீச்சர்களும் உள்ளன. ஆகவே, டேப், பிரஸ் மற்றும் ஸ்வைப் கொடுக்க பிரஷர் சென்ஸ் ஜிடி டிரிக்கர் (Pressure Sense GT Trigger) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
13 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்துள்ளது. 6500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 30W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.15 எம்எம் தடிமன் மற்றும் 198 கிராம் எடை கொடுத்துள்ளது.
கேமிங் மாடலாக இருப்பதால், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கின்றன. மேலும், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது.
இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.38,281ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.43,690ஆகவும் இருக்கிறது. இது இந்தோனேசிய மார்கெட்டில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையாகும். வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
பிளாக் அபைஸ் (Black Abyss), ரெட் பிளேஸ் (Red Blaze) மற்றும் சில்வர் கிளாசியர் (Silver Glacier) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்திய உள்ளிட்ட மற்ற மார்கெட்களில் விரைவில் எதிர்பார்க்கலாம். கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற டிசைன் மற்றும் பீச்சர்கலை கொடுத்துள்ளதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications