Home
Mobile

அறிமுகமானது புது இன்பினிஸ் 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 6500எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

இன்பினிஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ (Infinix GT 50 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தரமான கேமிங் அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்புடன் இந்த புதிய இன்பினிஸ் போன் வெளியாகி உள்ளது. இப்போது இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 50 Pro specifications): 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1208 x 2644 பிக்சல்கள், 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 330Hz டச் சாம்பிளிங் ரேட், 4500 நிட்ஸ் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection)உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புது இன்பினிஸ் 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்டிமேட் 4என்எம்(Octa Core MediaTek Dimensity 8400 Ultimate 4nm) சிப்செட் உடன் இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ போன் வெளியாகி உள்ளது. மாலி ஜி720 எம்சி6 ஜிபியு (Mali G720 MC6 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த இன்பினிஸ் போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 16 (XOS 16) மூலம் இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ மாடல் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு 3 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் மற்றும் 5 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பைகொண்டுள்ளது இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

யூஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster)ஆகிய வசதிகள் உடன் இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ போன் வெளியாகி உள்ளன.

இந்த இன்பினிஸ் போனுக்கு IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance)கொடுக்கப்பட்டுள்ளது. 5ஜி, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.4இ என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ உடன் இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ போன் வெளியாகி உள்ளது. மேலும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. இதுதவிர 10W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதிகளும் உள்ளன.

கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த போனில் பிரஷர் சென்சிட்டிவ் ஷோல்டர் ட்ரிகர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், போன் சூடாவதைக் கட்டுப்படுத்த HydroFlow Liquid Cooling சிஸ்டமும் இதில் இடம்பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி, கேமிங் கன்ட்ரோலர், கேமிங் டாக் மற்றும் காந்த முறையில் இணைக்கக்கூடிய கூலிங் ஆக்சஸரீஸ் போன்றவற்றையும் இந்த ஸ்மார்ட்போனுடன் பயன்படுத்த முடியும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ போனின் விலை ரூ.69,999-ஆக உள்ளது. பிளாக் அபிஸ் மற்றும் ரெட் பிளேஸ் என இரண்டு கலர்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். பிளிப்கார்ட் மற்றும் இன்பினிஸ் இந்தியா ஆன்லைன் ஸ்டோரில் இந்த சாதனம் முன்பதிவு செய்ய கிடைக்கிறது. வரும் அக்டோபர் 30-ம் தேதி இந்த சாதனம் விற்பனைக்கு வரும்.

அறிமுகமானது புது இன்பினிஸ் 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

இன்பினிஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம், சிறப்பு அறிமுக சலுகையாக ரூ.24,999 மதிப்புள்ள GT 50 Pro Gaming Ecosystem தொகுப்பை இலவசமாக வழங்குகிறது. இந்த சலுகையின் மூலம், போன் வாங்குபவர்களுக்கு பல்வேறு கேமிங் ஆக்சஸரீஸ்கள் கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும்.

இந்த இலவச தொகுப்பில் GT NX Station, GT NX Controller, GT Cooling Fan மற்றும் GT 50 Pro MagSafe Cover ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் மூலம், பயனர்கள் தங்களது கேமிங் அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்றிக்கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
Infinix GT 50 Pro smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X