Home
Mobile

அக்டோபர் 27-ல் களமிறங்கும் புது இன்பினிக்ஸ் 5ஜி போன்.. 6500எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ (Infinix GT 50 Pro) ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 27 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 50 Pro Specifications): 6.78-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 4500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அக்டோபர் 27-ல் களமிறங்கும் புது இன்பினிக்ஸ் 5ஜி போன்.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்டிமேட் சிப்செட்(MediaTek Dimensity 8400 Ultimate chipset) உடன் இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் 6500எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
Infinix GT 50 Pro India Launch Date Announced: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X