Home
Mobile

மிரண்டு போன மார்க்கெட்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Infinix போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் விரைவில் இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ (Infinix GT 50 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக மற்ற போன்களை விட தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 50 ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் பின்புறம் டூயல் கேமராக்கள் உள்ளன. அதேபோல் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் இன்பினிக்ஸ் ஜிடி 50 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும்.

மிரண்டு போன மார்க்கெட்.. வருகிறது புது Infinix போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 50 Pro Specifications): 6.78-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5K ரெசல்யூஷன் (1.5K resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்டிமேட் சிப்செட்(MediaTek Dimensity 8400 Ultimate chipset) உடன் இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த சிப்செட் மேம்பட்ட சிபியு மற்றும் ஜிபியு வேகத்தை வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி டூயல் ரியர் கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 50 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Photo Credit: Passionategeekz/ Sanju Choudhary

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 50 Pro Design and Specifications Leaked: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X