இந்த Infinix போனுக்கு இந்தியாவே வெயிட்டிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
இன்பினிக்ஸ் நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ (Infinix GT 30 Pro) ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
IMEI database தளத்தில் இன்பினிக்ஸ் ஜிடி30 ப்ரோ ஸ்மார்ட்போன் X6873 மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த போனின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ போனின் அம்சங்கள் வெளியாகும். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 20 Pro specifications): ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 அல்டிமேட் 5ஜி 4என்எம் (3.1GHz Octa Core MediaTek Dimensity 8200 Ultimate 5G 4nm) பிராசஸர் உடன் வெளிவந்துள்ளது இந்த போன். அதேபோல் மாலி-ஜி610 எம்சி6 ஜிபியு (Mali-G610 MC6 GPU) ஆதரவும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போன். 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங் (2304Hz PWM Dimmin), பிக்சல்ஒர்க் எக்ஸ்5 டர்போ கேமிங் டிஸ்பிளே சிப் (Pixelworks X5 Turbo Gaming Display Chip) உள்ளிட்ட பல டிஸ்பிளே பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம்.
108எம்பி சாம்சங் எச்எம்6 சென்சார் (Samsung HM6 sensor)+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக HiOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது புதிய இன்பினிக்ஸ் போன். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (In-display fingerprint scanner)ஆதரவு இதில் உள்ளது. மேலும் ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ ( (USB Type-C audio), ஸ்டீரியோ டூயல் ஸ்பீக்கர் (Stereo Dual Speaker), ஜேபிஎல் (JBL) சவுண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

குறிப்பாக 5000mAh பேட்டரி வசதி கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 45 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (45W fast charging) வசதியும் கொண்டுள்ளது இந்த போன். எனவே சில
நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.
5ஜி (5G), வைஃபை 6 ( Wi-Fi 6), புளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ ஸ்மார்ட்போன். மெக்கா ப்ளூ (Mecha Blue), மெக்கா ஆரஞ்சு (Mecha Orange), மெக்கா சில்வர் (Mecha Silver) நிறங்களில் இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போனை வாங்க முடியும். தற்போது ரூ.22,999 விலையில் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ போன் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








