Home
Mobile

மிரண்டுபோன மார்க்கெட்.. 108MP கேமரா.. 45W சார்ஜிங்.. அறிமுகமானது புது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ (Infinix GT 30 Pro) ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகாப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 30 Pro Specifications): 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங், 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது புது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்

அதேபோல் லோவ் ப்ளூ லைட், ஃபிளிக்கப்-ப்ரீ சர்டிஃபிகேஷன் (Flicker-free Certification) உடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அல்டிமேட் (MediaTek Dimensity 8350 Ultimate) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு XOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியும் இந்த போனில் உள்ளது.

இன்பினிக்ஸ் XBoost கேமிங் எஞ்சின் (Infinix's XBoost Gaming Engine) மற்றும் விசி லிக்விட் கூலிங் ( VC liquid cooling) சிஸ்டம் போன்ற பல தரமான கேமிங் அம்சங்களும் இந்த போனில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தில் Folax மற்றும் DeepSeek R1 மூலம் இயங்கும் Infinix AI அம்சமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

5500mAh பேட்டரி இந்த போனில் உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே 5ஜி, வைஃபை6 , புளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 190 கிராம் ஆகும். பிளேட் ஒயிட் (Blade White), ஷேடோ ஆஷ் (Shadow Ash) மற்றும் டார்க் ஃப்ளேர் ( Dark Flare) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

மிரண்டுபோன மார்க்கெட்.. அறிமுகமானது புது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்

இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் உடன் இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ கேமிங் மாஸ்டர் எடிஷன் மாடலும் அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். இந்த மாடலில் MagCharge Cooler மற்றும் MagCase ஆகியவை வருகிறது. கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி ஸ்பெஷல் எடிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ தற்போது மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். குறிப்பாக 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ மாடலின் விலை MYR 1,299 (இந்திய மதிப்பில் ரூ.26,066) ஆகும். பின்பு இதன் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை MYR 1,499 (இந்திய மதிப்பில் ரூ.30,151) ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 30 Pro launched in Malaysia: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X