Home
Mobile

ஜூன் 3 வரை எந்த போனும் வாங்காதீங்க.. இந்தியாவுக்கு வரும் புது Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

சமீபத்தில் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ (Infinix GT 30 Pro) ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் ஜூன் 3-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 30 Pro Specifications): 6.78-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங், 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

ஜூன் 3 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது Infinix  5ஜி போன்..

லோவ் ப்ளூ லைட், ஃபிளிக்கப்-ப்ரீ சர்டிஃபிகேஷன் (Flicker-free Certification) உடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அல்டிமேட் (MediaTek Dimensity 8350 Ultimate) சிப்செட் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு XOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியும் இந்த போனில் உள்ளது.

இன்பினிக்ஸ் XBoost கேமிங் எஞ்சின் (Infinix's XBoost Gaming Engine) மற்றும் விசி லிக்விட் கூலிங் ( VC liquid cooling) சிஸ்டம் போன்ற பல தரமான கேமிங் அம்சங்களும் இந்த போனில் உள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

Take a Poll

5500mAh பேட்டரி இந்த போனில் உள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, வைஃபை6 , புளூடூத் 5.4, என்எப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 190 கிராம் ஆகும். பிளேட் ஒயிட் (Blade White), ஷேடோ ஆஷ் (Shadow Ash) மற்றும் டார்க் ஃப்ளேர் ( Dark Flare) நிறங்களில் போன் வாங்க கிடைக்கும்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.26,000 விலையில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 30 Pro india launch date revealed: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X