Home
Mobile

மே 21 உறுதி.. 108எம்பி கேமரா.. 67W சார்ஜிங்.. வருகிறது புதிய Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ (Infinix GT 30 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வரும் மே 21-ம் தேதி மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்திய சந்தை மற்றும் உலக நாடுகளில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட கேமிங் அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மே 21 உறுதி.. வருகிறது புதிய Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 30 Pro specifications): 6.78-இன்ச் பிளாட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1224 x 2720 பிக்சல்கள், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்திவாய்ந்த டைமன்சிட்டி 8350 அல்டிமேட் சிப்செட் (Dimensity 8350 Ultimate chipset) உடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த இன்பினிக்ஸ் போனில் உள்ளது.

XOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

அதேபோல் 5500mAh பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய இன்பினிக்ஸ் போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 30 Pro India launch date announced: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X