இந்தியாவுக்கு வரும் புதிய இன்பினிக்ஸ் 5ஜி போன்.. OLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜிடி 30 (Infinix GT 30) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். குறிப்பாக இந்த புதிய இன்பினிக்ஸ் போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
இன்பினிக்ஸ் ஜிடி 30 அம்சங்கள் (Infinix GT 30 Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்டிமேட் (MediaTek Dimensity 7400 Ultimate) சிப்செட் கொண்டுள்ளது இன்பினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

XOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
இன்பினிக்ஸ் XBoost கேமிங் எஞ்சின் (Infinix's XBoost Gaming Engine) மற்றும் விசி லிக்விட் கூலிங் ( VC liquid cooling) சிஸ்டம் போன்ற அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த போனில் மேம்பட்ட பல கேமிங் அம்சங்கள் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.5கே OLED டிஸ்பிளே உடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன் இந்தியாவுக்கு வரும். மேலும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2160 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2304Hz பிடபுள்யூஎம் டிம்மிங், 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பு இந்த புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
5200எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








