ஆக.8-க்கு அப்புறம் இதுதான்.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. GT டிரிகர்ஸ்.. 90FPS கேமிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டையும் பட்டையை கிளப்பும் பீச்சர்களையும் கொடுக்கும் மாடலாக இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி+ (Infinix GT 30 5G+) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, வெளியீட்டு தேதியுடன் முக்கிய பீச்சர்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன. 16 ஜிபி ரேம், 90FPS கேமிங், 1.5K அமோலெட் டிஸ்பிளே போன்ற பீச்சர்களிலும், சைபர் மெச்சா டிசைனிலும் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி+ போனின் விவரங்கள் இதோ.
இந்த ஜிடி 30 5ஜி+ போனானது வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால், அந்த தளத்தில் முக்கிய பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. இது கேமிங் பிரியர்களை கவரும்படி இருக்கிறது. ஏற்கனவே, இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ 5ஜி+ மாடல் இந்திய மார்கெட்டில் வெளியாகிவிட்டது.

ரூ.24,999 பட்ஜெட்டில் வெளியாகி இப்போது டிஸ்கவுண்ட் போக ரூ.22,999 பட்ஜெட்டில் கிடைத்து வருகிறது. ஆகவே, இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி+ போனானது, அதைவிட மலிவான விலைக்கு வெளியாக இருப்பது உறுதியாகும். ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக வாய்ப்புள்ளது. ஆரம்ப விலை மாடல் அதைவிட மலிவான விலைக்கு இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் சைபர் மெச்சா 2.0 (Cyber Mecha 2.0) டிசைன், பேக் பேனலில் கஸ்டமைசபிள் செய்து கொள்ளும்படி மெச்சா லைட்ஸ் (Mecha Lights) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மேலும், இந்த செக்மெண்ட்டில் முதல் முறையாக ஜிடி ஷோல்டர் டிரிகர்களை (GT Shoulder Triggers) கொடுக்க இருக்கிறது. இப்போது மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி+ அம்சங்கள் (Infinix GT 30 5G+ Specifications): இந்த போனில் 6.78 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 90FPS கேமிங் அவுட்புட் கிடைக்க இருக்கிறது. மேலும், அவுட்டோரிலும் பிரீமியம் கேமிங் அவுட்புட் கொடுக்கும்படி 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிலாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. கேமிங் என்ஹான்ஸ்மெண்ட் கொடுக்க எக்ஸ்பூஸ்ட் ஏஐ (XBoost AI) சப்போர்ட் கிடைக்கிறது. இதில் ஏஐ மேஜிக் வாய்ஸ் சேஞ்சர், சோன்டச் மாஸ்டர், ஈஸ்போர்ட்ஸ் மோட் போன்ற பீச்சர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) மூலம் பல்வேறு பீச்சர்களை பேக் செய்துள்ளது.
ஆகவே, ஏஐ கால் அசிஸ்டன்ட் முதல் ஏஐ ரைட்டிங், வாய்ஸ் அசிஸ்டன்ட் வரையில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி+ போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 எஓஸ்சி (MediaTek Dimensity 7400 SoC) சிப்செட் கிடைக்கிறது.
பல்ஸ் கிரீன் (Pulse Green), சைபர் ப்ளூ (Cyber Blue) மற்றும் பிளேட் ஒயிட் (Blade White) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பீச்சர்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகும் என்று இன்பினிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் பட்ஜெட் செக்மெண்ட் இடம்பெற வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








