பிச்சிக்கும் விற்பனை.. ஆஃபர் ரேட்ல 64MP கேமரா.. 5500mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
பைபாஸ் சார்ஜிங்குடன் 5500mAh பேட்டரி, எப்/1.75 அபெர்சருடன் 64 எம்பி மெயின் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி (Infinix GT 30 5G) பக்கா ஆப்ஷனாக இருக்கும். இப்போது, தள்ளுபடி விலைக்கு வாங்க கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டானது 12 சதவீத தள்ளுபடி போக ரூ.21,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.20,999 விலைக்கு இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

சைபர் மெச்சா டிசைனில் பேக் பேனலில் எல்இடி லைட் கொடுக்கிறது. இந்த லைட்டிங்குடன் பல்ஸ் கிரீன் (Pulse Green), சைபர் ப்ளூ (Cyber Blue) கலர்களில் வாங்கி கொள்ளலாம். பிளேட் ஒயிட் (Blade White) கலரும் கிடைக்கிறது. ப்ளோட்டிங் விண்டோ (Floating Window), டைனாமிக் பார் (Dynamic Bar), கேம் மோட் (Game Mode), கிட்ஸ் மோட் (Kids Mode) பீச்சர்கள் உள்ளன.
எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 2 வருட ஓஎஸ் அப்டேட், 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. கேமிங் பிரியர்களுக்காக 6 லேயர் விசி கூலிங் (VC Cooling) மற்றும் 90FPS BGMI கேமிங் அவுட்புட் கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற பீச்சர்களும் பட்டையை கிளப்பும்படி இருக்கின்றன.
இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி அம்சங்கள் (Infinix GT 30 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 4nm) சிப்செட்டுடன் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஏஐ எரைசர் (AI Eraser), ஏஐ எக்ஸ்டென்டர் (AI Extender) பீச்சருடன் 64 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
மேலும், மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 13 எம்பி செல்பீ ஷூட்டர் கேமராவை இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 6.78 இன்ச் (1224 x 2720 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிலாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்படுகிறது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 2304Hz PWM ஃபிரிகொன்சி கொடுக்கப்பட்டு உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 5500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications