Home
Mobile

மிரளுது அமேசான்.. ரூ.17,999 பட்ஜெட்ல 64MP கேமரா.. 5500mAh பேட்டரி.. 16GB ரேம்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய கேமிங் பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான பட்ஜெட்டில் 64 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 5500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களுடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி+ (Infinix GT 30 5G+) மாடலானது களமிறங்கி இருக்கிறது. கஸ்டமைசபிள் கேமிங் டிரிகர்கள் மற்றும் சைபர் மெச்சா டிசைன் கொண்ட இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி+ போனின் முழு விவரங்கள் இதோ.

கேமிங் பிரியர்களுக்கான டிசைன் மற்றும் பீச்சர்களுடன் இது வெளியாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. பேங்க் தள்ளுபடி போக கிடைக்க இருப்பதால், பட்ஜெட் விலைக்கு வாங்கி கொள்ள முடியும். கேமிங் டிரிகர்கள் மட்டுமல்லாமல், விசி கூகுலிங் சிஸ்டம், கஸ்டமைசபிள் எல்இடி போன்ற ஹார்ட்வேர் லெவல் கேமிங் பீச்சர்கள் கிடைக்கின்றன.

மிரளுது அமேசான்.. ரூ.17,999 பட்ஜெட்ல 64MP கேமரா.. 5500mAh பேட்டரி!

அதேபோல கேம் மோட் (Game Mode), எக்ஸ்பூஸ்ட் ஏஐ (XBoost AI) போன்ற சாப்ட்வேர் லெவல் கேமிங் பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது. இதுபோக பைபாஸ் சார்ஜிங், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், 6 ஆக்சிஸ் கைகோஸ்கோப் போன்ற பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இப்போது, டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி போன்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 30 5ஜி+ அம்சங்கள் (Infinix GT 30 5G+ Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7300 SoC) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 3 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்கிறது.

8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. கேமிங் மாடலுக்கு ஏற்ப டிஸ்பிளே பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. 6.78 இன்ச் (1224 x 2720 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இதுபோக 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த ஜிடி 30 5ஜி+ போனில் 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் செட்டப் கிடைக்கிறது.

மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கிடைக்கிறது. கேமிங்குக்கு ஏற்ப 5500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், மதர் போர்டுக்கு நேரடியாக பவர் செல்லும்படி பைபாஸ் சார்ஜிங் கிடைக்கிறது. அதேபோல விசி கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஐஆர் பிளாஸ்டர் கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.19,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும் இருக்கிறது. ரூ.1,500 தள்ளுபடி போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆகஸ்ட் 14ஆம் தேதி விற்பனை தொடங்குகிறது. பிளிப்கார்ட் தளத்தில் வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Infinix GT 30 5G With 64MP Camera Sale From August 14 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X